பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

கம்பராமாயணம்



மலைக்காற்று பட்டதும் அலைஅலையாய் வானரர் உயிர்த்து எழுந்தனர்; அனுமன் உதவியை இராமன் பெரிதும் பாராட்டினான். இருந்த இடத்தில் மறுபடியும் மலை கொண்டு சேர்க்கப்பட்டது.

போருக்குத் தூண்டிவிட்ட மாலியவானே மனம் மாறினான்; ‘போரும் அமைதியும்’ பற்றி எழுதும் எழுத்தாளனாய் மாறினான். “அனுமன் ஆற்றல் அளவிடற்கு அரியது; இராமன் வீரம் வியத்தற்கு உரியது” என்று கூறித் தனி ஒரு “சீதையை விட்டு விடு வதே கும்பிடுபோட்டுச் செய்தத்தக்கது” என்றான்.

சஞ்சீவி பருவதத்தால் வானரவீரர் உயிர் பெற்ற செய்தி அறிந்து. இறந்துவிட்ட தன் வீரரை உயிர்ப்பிக்க இராவணன் நினைத்தான்; குறி தவறிவிட்டது; மரித்து விட்ட அவர்கள் உடலை ஏற்கனவே கடலில் எறிந்து விட்டமை நினைவுக்கு வந்தது.

தரையில் தட்டிய பந்து உயர எழுவது போல மீண்டும் வீரம் பேசிப் போர்வினை ஆற்ற இராவணன் விரும்பினான். இந்திரசித்து தான் நிகும்பலை என்னும் கோயில் சென்று, வேள்விகள் இயற்றி, வேண்டிய வரங்களைப் பெற்று வருவதாய் விளம்பினான்; அவற்றால் படைக்கருவிகளும் மிக்க ஆற்றலும் சேரும்’ என்று கூறினான். ‘இதில் முந்திக் கொள்வது சிந்திக்கத் தக்கது’ என்று பேசினான்.

எதிரிகளைத் திசை திருப்ப யோசனை ஒன்று வெளியிட்டான் இந்திரசித்து; மகோதரன் மந்திர மாயையால் சனகனைப் படைத்தது போலச் சீதையின்