பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலகாண்டம்

47



களையும் அறிந்தவன்; அவன் சட்ட நுணுக்கங்களை உணர்ந்தவன்; நதியை எந்த ஒரு மாநிலமும் உரிமை கொள்ள முடியாது. அது பாயும் இடம் எல்லாம் அதற்கு வழிவிட வேண்டும் என்பதை அறிந்தவனாய் இருந்தான்.

கங்கை நதி, மேலிடத்தில் வாழ்ந்த தேவர்களுக்கு மட்டும் நீராடவும், விளையாடவும் பயன்பட்டு வந்தது. பிரமன் அதனை நோக்கி, ‘நீ மானுடர்க்கும் பயன்படுக; மண்ணுலகில் மாந்தர் உம்மை எதிர்பார்க்கின்றனர்; சற்றுக் கீழேயும் பார்’ என்று ஆணையிட்டான். நிலைகுலைந்து பொங்கிய அலைகளுடன் கங்கை மண்நோக்கிப் பாய்ந்தது. “அணைக்கட்டுக்களைச் சரியாய் அமைக்காத நிலத்தவர் எப்படித் தக்கபடி பயன்படுத்த இயலும்? ஒருகை பார்த்துவிடுவது” என்று வேகமாய்ப் பாய்ந்தது.

இந்த மண்ணுலகம் அதனைத் தாங்காது என்பதை அறிந்த தேவர் சிவபெருமானிடம் சென்று முறை யிட்டனர்; “மழை பெய்யாமலும் கெடுக்கும்; பெய்தும் கெடுக்கும் என்பது உலகு அறிந்த ஒன்று; சில பகுதிகளில் மழையே பெய்வது இல்லை; அங்கே பசியும் பஞ்சமும் விஞ்சி நிற்கின்றன. சில இடங்களில் மழை மிகுதியாய்ப் பெய்து வெள்ளப் பெருக்கை விளைவித்து, ஊர்களை அழித்து விடுகிறது. அழிக்கும் ஆற்றல் நெருப்புக்கு மட்டும் இல்லை; நீருக்கும் உண்டு, “அதனை அடக்கி வேகத்தைக் குறைத்துப் பூமிக்கு அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.

விரிசடைக் கடவுளாகிய சிவபெருமான் தம் சடையை விரித்து, அதன் வழியை மறைத்தார். பெட்டிப்