பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

கம்பராமாயணம்



நோக்கினான்; அவளும் நோக்கினாள்; இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்”. மாடத்தில் இருந்தவள் அவன் நெஞ்சில் குடி புகுந்தாள். முற்றத்தில் நடந்த இளைஞன் அவள் நெஞ்சில் குடி புகுந்துவிட்டாள். அவள் அவனுக்குச் செஞ்சொற்கவி இன்பமாக விளங்கினாள்.

சந்திப்பு

முனிவர், முன்னே நடந்தார். அவர்பின் இராமன் தொடர்ந்தான். திட்டமிட்டபடி மூவரும் சனகன் அரண்மனையை அடைந்தனர். அவன் விருந்தாளி களாய் மூவரும் அங்குத் தங்கினர். இராமன் நெஞ்சில் சீதையைச் சுமந்து அவள் நினைவாகவே இருந்தான்; அவளும் இராமன் நினைவே நிறைந்தவளாய் இருந்தாள். புதிய வேட்கையில் அவர்கள் நெஞ்சங்கள் பதிந்து கிடந்தன.

சனகன் ஒரு பெரு வேள்வி நடத்தினான். அதில் பங்கு கொள்ள முனிவர்களும் அந்தணர்களும் வந்து சேர்ந்தனர். மாமன்னைனை மறையோர்கள் வாழ்த்தினர். அரண்மனையில் அகலமான ஒரு பெரிய கூடத்தில் சனகன் வந்து அமர்ந்தான்; குழுமி இருந்த விழுமிய முனிவர்களோடு அளவளாவி அவர்கள் நல்லாசியைப் பெற்றான்.

விசுவாமித்திரரோடு வந்திருந்த அரசிளங்குமரர் களான இராம இலக்குவரை சனகன் கவனித்தான். பெண்ணைப் பெற்றவன் ஆயிற்றே அதனால், அவன் கண்கள் தன் மகளுக்குத் தக்க மணாளனைத் தேடியது. “முருகனைப் போன்ற அழகன் தன் மருகனாக மாட்டானா”? என்று ஏங்கினான்.