பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கம்பராமாயணம்



செயல்படும் அவைக் களத்தில் இருந்த முனிவர் சதானந்தர், சீதை சனகனுக்குக் கிடைத்த ஆதி நிகழ்ச்சியையும், வில்லை முறிக்க வேண்டிய தேவையையும் உரைத்தார்.

சீதை சனகன் வளர்ப்பு மகள்; அவன் மன்னனாக இருந்தும் உழவர்களைப் போலத் தானே சென்று நிலத்தை உழுது வந்தான். “அவன் கலப் பையின் கொழு முனையில் தட்டுப்பட்ட செல்வக் கொழுந்து சீதை” என்பதைத் தெரிவித்தார். அவள் மண்மகள் தந்த அரிய செல்வம்; அவளைச் சனகன், ‘தன் மகள்’ என்றே வளர்த்து வந்தான். அவள் பேரழகைக் கண்டு அரசர் போர் எழுப்பித் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். அவனாக விரும்பி, அவளை யாருக்கும் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

அமைச்சர்களுடன் கலந்து, அடுத்துச் செய்வது யாது? என்று ஆலோசித்தான்; தன்னிடம் ஒரு காலத்தில் ஒப்படைக்கப்பட்ட சிவதனுசு ஒன்று, எடுப்பார் அற்று முடங்கிக் கிடந்தது. “அந்த வில்லை எடுத்து, அதனை வளைத்து, நாண் ஏற்றி, அம்பு செலுத்தக்கூடிய ஆடவனே அவளை மணக்கத் தக்கவன்” என்று அறிவித்தான்.

கனியைப் பறிக்கக் கல் தேவைப்பட்டது. கல்லை எடுத்தால்தான் அதைக் கொண்டு கனியை வீழ்த்த முடியும். அதே நிலைமைதான் இங்கு உருவாயிற்று. “வில்லை வளைத்தால்தான் அவளை அடைய முடியும்” என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. தேசத்து அரசர்கள் பலர் சீதைபால் நேசம் கொண்டு வில்லைத் துக்கிப் பார்த்தார்கள்: அது தந்த தொல்லையைக் கண்டு தோல்வியைத் தாங்கிய