பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கம்பராமாயணம்



திறப்பதற்கு முன் தொடர் நிகழ்ச்சிகள் ஆயின. எடுத்தது கண்டவர் இற்றது கேட்டனர். ஒசைதான் முடிவை அவர்களுக்கு அறிவித்தது. அவன் வில்லை வளைத் ததையும், நாண் பூட்டியதையும், அவர்கள் காணவே இல்லை. முறிந்த ஒசையை மட்டும் கேட்டுச் செய்தி அறிந்தனர்.

அது வளைக்கும் போதே இரண்டாக முறிந்து விட்டது. அப்பேரொலி திக்கெட்டும் எட்டியது. சீதையின் செவிகளையும் எட்டியது. அவளுக்கு அது மனமுரசாக இரட்டியது. நீலமாலை என்னும் பெயருடைய பேரழகி அவள் தோழி சீதையிடம் செய்தி சொல்ல ஒடோடிச் சென்றாள்.

மக்கள் மகிழ்ச்சி

“கோமுனிவனுடன் வந்த கோமகன்; நீல நிறத்தவன்; தாமரைக்கண்ணன்; அவன்தான் அந்த வில்லை முறித்தான் என்று நீலமாலை சொல்ல அதைக் கேட்ட சானகி, அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்னும்படி ஆகியது.

தான் உப்பரிகையில் இருந்து கண்டவனே கொண்டவனாக வரப் போகிறான் என்பதில் அவள் கொண்ட மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகியது. அவள் பன்மடங்கு பொலிந்த முகத்தினன் ஆயினள்.

நாட்டு மக்கள் இராமன் நலம் கண்டு வியந்தனர்.

“நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்” என்று பாராட்டினர். “சீதையும் இராமனுக் கேற்ற துணைவி” என்று அவள் மாட்சிகளைப் பேசினர்.