பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

கம்பராமாயணம்



ஒருயுகமாகக் கழிந்தது. நாளும் கிழமையும் காட்டி, இளையவரைச் சேராதபடி தடுக்கும் முதியவர் செயலைச் சாடினர். மறுநாள் வருக்ைககாக எதிர்பார்த்து வாடினார்.

மண விழா

வசிட்டர் தலைமையில் திருமணம் நடந்தேறியது. மணத் தவிசில் மங்கை இள நங்கை சீதையும் அடல் ஏறுபோன்ற விடலையாகிய இராமனும் இருந்த காட்சியைக் கண்டவர் மனம் குளிர்ந்தது. தன் மகளை மருமகன் கையில் சனகன் ஒப்புவித்தான்; ஆசிகள் நல்கினான்.

“நீவிர் இருவீரும் வீரனும் வாளும் போலவும், கண்ணும் இமையும் போலவும், கரும்பும் சாறும் போலவும், பூவும் மணமும் போலவும், நிலவும் வானும் போலவும், அறிவும் அறமும் போலவும் இணைந்து வாழ்விராக” என வாழ்த்தினான். அவள் மெல்லிய கரங்களைப் பிடித்து இராமன் கைகளில் தந்து, சடங்கின்படி அவளை ஒப்புவித்தான். அவள் மலர்க் கரங்களைப் பற்றி இராமன் அன்றுமுதல் அவள் இன்னுயிர்த் துணைவன் ஆயினான்.

அந்தணர் ஆசி கூறினர்; சுமங்கலிகள் மங்கல வாழ்த்துப் பாடினர்; நகர மாந்தர் பூவும் அரிசியும் தூவி ஆசி கூறினர்; விண்ணவர் மலர்மாரி பொழிந்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்; சங்குகள் முழங்கின; முழவுகள் தழங்கின; பேரரசர் பொன்மழை பொழிந்தனர்; முத்தும் மணியும் எங்கும் இறைக்கப்பட்டன; கத்தும் குழலோசை காதிற்