பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலகாண்டம்

67



ஆணவம் மிக்கவன்; அவன் பெயரைச் சொன்னாலே அரசர் நடுங்கினர்; அவன் முன் வராமல் ஒடுங்கினர். இராமன் வில்லை முறித்த ஒலி விண்வரை எங்கும் அதிர்ந்து சென்றது. இப்பேரொலியைக் கேட்டுப் பரசுராமன் கிளர்ந்து எழுந்தான்; சிவதனுசினை, முறித்து இராமன் அங்கு இருப்பதை உணர்ந்தான்; ‘அவனை வழியில் மடக்கி இடக்கு செய்வது, என்று முடிவுக்கு வந்தான். மணம் முடித்து அயோத்தி திரும்பும் வழியில் அவனை நிறுத்தித் தன்னோடு போருக்கு அழைப்பது என்று முடிவெடுத்தான்.

மழுப்படை ஏந்திய இராமன் பரசுராமன்; விற்படை ஏந்தியவன் கோதண்டராமன்; படைக் கருவிகளால் இவர்கள் வேறுபடுத்தி உணரப்பட்டனர். இராமன் அயோத்தி திரும்பினான். சுற்றமும் படைகளும் சூழத் தேர் ஏறி வந்து கொண்டிருந்தான், மழுப் படை ஏந்திய இராமன் வழிபறிக் கொள்ளையன் போல் குறுக்கே வந்து நின்றான்.

“இவன் யார்? ஏன் இங்கு வந்தான்?” என்பது இராமனுக்கு விளங்கவில்லை. தசரதன் முதியோன் ஆதலின், அவன் சரிதம் அறிந்தவனாய் இருந்தான். அவன் கூடித்திரியர் பகைவன்; அவர்களை வேர் அறுத்துப் போர் செய்தவன் என்பதை அறிந்தன். “அடப்பாவி! நீயா?” என்று குரல் கொடுத்து அலறிவிட்டான்; அவன்முன் தான் நிற்க முடியாது என்பதால் அலறி விழுந்தான்; நாப்புலர உயிர்ப்பிச்சை கேட்டான்.

இந்தக் கிழவனைப் பரசுராமன் ஒர் எதிரியாக ஏற்கவில்லை; மறுபடியும் சாதிவெறி அவனைத் தலைக்