பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7


விமரிசனம்

கம்பராமாயணம்
ராசீ

அமரகவி பாரதியாரால் பாராட்டப் பெற்ற கம்பனின் காவியமான கம்பராமாயணம் இன்றைய உரைநடை உலகத்தில் புதிய உருவெடுத்து ‘உரை நடை’ நூலாக வெளி வந்துள்ளது.

சிலபேர் உரை நடையைக் கவிதையாக்கிக் கொண்டிருக்கிற இக்கால கட்டத்தில் உரைநடை ஆசிரியர் கவித்துவமான வரிகளை உரைநடையின் பெயரில் காவியச் சுவை குன்றாமல் செறிவான வரிகளுடன், நளினமான வார்த்தைக் கோப்புகளுடன் வளமையான தமிழில் வழங்கியுள்ளார் இலக்கிய சோதனைக்காரர் ‘பேராசிரியர் ராசீ’.

இவரின் புதுமுயற்சி வெற்றிபெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும். தெளிவான சிறந்த சொல்லாட்சி ஆசிரியரின் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகும்.

இன்றியமையாத தருணங்களில் மட்டுமே ‘கவிதை வரிகள்’ கண் சிமிட்டுகின்றன. மற்றபடி நூலெங்கும் உரைநடை ராஜ நடை போடுகிறது. பண்டித தமிழிலன்றிப் பழகு தமிழில், சுவைபட எழுதப்பட்டுள்ளதால் நூலின் பக்கங்கள், நம் விரல்