பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

கம்பராமாயணம்



“நீங்கள் மாற்றத்தை ஏற்கிறீர்களா? இல்லையா? என்பது கேள்வி அன்று; இராமன் ஏற்றத்தை மட்டும் கூறி, அவனை ஏற்க இசைவு தருகிறீர்களா இல்லையா என்பதை இயம்புக” என்றான்.

“நாட்டு மக்கள் அவனை விரும்புகின்றனர்; அதனால் ஆட்சி ஏற்பதற்கு அவனுக்குத் தகுதி உள்ளது” என்று சுருக்கமாகவும் தெளிவுபடவும் அமைச்சர் உரைத்தனர்.

“அமைச்சர் ஏற்கிறார்களா? அரசன் விரும்பு கிறானா என்பன அடிப்படை அல்ல; மக்கள் விருப்பம் தான் முடிவுக்கு உதவுவது” என்று கூறிய அரசியல் கருத்துப் போற்றுவதாய் இருந்தது.

வசிட்டர் கருத்து

வசிட்டரை அணுகி அவர் கருத்து யாது? எனத் தசரதன் கேட்டான்.

“அமைச்சர் ஆமோதித்து விட்டனர்; நீயும் இதை விரும்புகிறாய்; மக்களும் இதை வரவேற்பர்; இராமனுக்கும் தகுதிஉள்ளது” என்று வசிட்டர் கூறினார்; மேலும், தொடர்ந்து இராமனைப் பற்றிய தம் கருத்துகளை விரித்து உரைத்தார்.

“இராமன் யாரோ எவரோ என்று கூறும் நிலையில் இல்லை; மாமன்னன் மகன்; அதனால் ஆட்சி உரிமைக்கு அவன் தகுதி உள்ளவன்”.

“அடுத்து அவன் மனைவி சீதைபால் பட்டத்து அரசி ஆவதற்கு வேண்டிய நல்லியல்புகள் அனைத்தும்