பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் كحجد حلا W1 தெய்வ நம்பிக்கையும், திருமால் திருஅவதாரக் கொள்கைகளும் விவாதத்திற்குரியனவோ ஆராய்ச்சிக்குரியனவோ அல்ல. அவை நம்பிக்கை பற்றிய பிரச்சனைகளாகும். அவை தொடர்பான பிரச்னைகளில் கேள்விக்கிடமில்லை. அத்துடன் சில பிரச்னைகளை தத்துவ ரீதியில் காண வேண்டும். தத்துவ ஞான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். கம்பனுடைய கவிதை ஒவ்வொன்றிலும் உள்ள மேலெழுந்த வாரியான பதவுரை, பொழிப்புரை மட்டுமல்லாமல் அவைகளின் உள்ளார்ந்த பொருளையும் அவைகளில் பொருந்தியுள்ள கருத் தமைவுகளையும் காண வேண்டும். அவைகளின் உட் பொருளையும் உணர வேண்டும். கவியுள்ளத்தையும் காண வேண்டும். கம்பனுடைய கவிதைகள் கவிதை நயம், அவைகளில் கருத்துக்கள் ஆகியவை மக்களிடம் செல்ல வேண்டும். மக்களிடம் பரவ வேண்டும். அதற்கான முறையில் நமது இலக்கிய அமைப்புகள் பணியாற்ற வேண்டும். \ கம்பனுடைய காவியத்தையும் கவிதைகளையும் ஆரம்பப் பள்ளிகளிலிருந்து கல்லூரிகள் மற்றும் ஆராயச்சிப் படிப்புகள் வரை கொண்டு செல்ல வேண்டும். கம்பனைப் பற்றிப் பல்கலைக் கழகங்களில் தனித் துறைகள் அல்லது பிரிவுகள் உண்டாக்கி ஆழப் படிப்புகளைக் கொண்டு வர வேண்டும். ஆலயங்கள் தோறும் கம்ப ராமாயணத்தைப் பற்றிய சொற்பொழிவுகள் நடத்தப்பட வேண்டும். ஒரு தடவை, கேரளத்தைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவரிடம் தமிழ் இலக்கியங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது கம்பராமாயணம் பற்றிய பேச்சும் விவாதமும் வந்தது. அவரும் தமிழ் இலக்கியங்களைப் பற்றி ஒரளவு நன்கு அறிந்தவர். அவர் கம்ப ராமாயணத்தைப் பற்றி நான் கேள்விப்பட்ட அளவுக்கு அது வால்மீகி இராமாயணத்திற்குச் சமமானது. சில இடங்களில் கம்பர் வான்மீகியையும் மிஞ்சி விட்டார். எழுத்தச் சனுக்குக் கூட மலையாள மொழியில் இராமாயணம் எழுதுவதற்குக் கம்பராமாயணம் துணையாக இருந்தது என்று கூறலாம். கம்பனைப் பற்றியப்பல ஆய்வுகளும் செய்ய வேண்டும். பல ஆய்வு நூல்களும் எழுத வேண்டும்’ என்று கூறினார். 'கம்பன் ஒரு சமுதாயப் பார்வை” என்னும் தலைப்பில் ஒரு நல்ல ஆய்வு நூல் எழுதுங்கள் இலக்கணங்களைப் பற்றிக் கூட அதிகம் கவலைப்பட வேண்டாம். மொழி நடையைப் பற்றிக் கூட அதிகம் கவலைப்பட வேண்டாம் கருத்துக்களும் சில உண்மை