பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 58 الحجدلإح காதலும் பெருங்காதலும் இராவணன் தனதுத் தங்கையின் மூக்கையும் காதுகளையும் பார்த்து நாணமுற்று நீ செய்த குற்றம் என்ன? உன் அங்கங்களை அவர்கள் அறுக்க வேண்டிய காரணம் என்ன? என்று இராவணன் கேட்கிறான். சூர்ப்பனகை மேலும் பேசுகிறாள். “என்வயின் உற்ற குற்றம், யாவர்க்கும் எழுதொணாத தன்மையன் இராமனோடும், தாமரை தவிரப் போந்தாள், ! மின்வயின் மருங்குல் கொண்டாள்; வேய் வயின் மேன் தோள்கொண்டாள் பொன் வயின் மேனி கொண்டாள்; பொருட்டினால் புகுந்தது என்றாள்' என்னும் தோற்றுவாயுடன் தொடங்குகிறாள். சீதையின் அழகையும் சிறப்புகளையும் விவரித்து எடுத்துக் கூறி இராவணனுடைய உள்ளத்தில் காமக் கனலை மூட்டிவிடுகிறாள். சீதையைப் பற்றி “காமரம் முரலும் பாடல்கள் எனக் கனிந்த இன்சொல் தேமலர் நிறைந்த கூந்தல், தேவர்க்கும் அணங்காம் என்னத் தாமரை இருந்த தையல், சேடியாம் தரமும் அல்லள்; யாம் உரை வழங்கும் என்பது ஏழைமைப் பாலது அன்றோ?” அவளைப் பற்றி நான் எடுத்துரைக்க முயல்வது அறியாமையிற் பட்டதாகும்’ என்று கூறுகிறாள். இன்னும், “மஞ்சொக்கும் அளக ஒதி; (அடர்ந்த கூந்தல்) மழைஒக்கும் வடிந்த கூந்தல்; பஞ்சொக்கும் அடிகள், செய்ய பவளத்தின் விரல்கள் ஐய! அஞ்சொற்கள் அமுதில் அள்ளிக் கொண்டவள்; வதனம் மைதீர் கஞ்சத்தின் அறவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள்” "ஈசனார் கண்ணின் வெந்தான் என்பது இழுதை சொல், இவ் வாசம் நாறு ஒதியாளைக் கண்டனன், வவ்வல் ஆற்றான் பேசலாம் தகைமைத்து அல்லாப் பெரும் பிணி பிணிப்ப, நீண்ட ஆசையால் அழிந்து தேய்ந்தான், அருங்கன் அவ்வுருவம்; அம்மா”