பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 60 வள்ளலே உனக்கு நல்லேன்; மற்றுநின் மனையில் வாழும் கிள்ளை போல் மொழியார்க் கொல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே' என்றெல்லாம் சீதையைப் பற்றி மிக அற்புதமாக எடுத்துக் கூறி இராவணனுடைய உள்ளத்தில் உள்ள காமத்தீயை பெருநெருப்பாக ஊதிவிட்டாள். இன்னும் சீதையை நீ எடுத்துக் கொண்டு எனக்கு இராமனைக் கொடுப்பாயாக என்று தனது உள்ளக் கிடக்கையையும் வெளிப்படுத்துகிறாள். 'மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்தத் தேன்கொண்டு ஊடாடும் கூந்தல், சிற்றிடைச் சீதை என்னும், மான்கொண்டு ஊடாடு நீ உன்வாள் வலி உலகம் காண ! யான் கொண்டு ஊடாடும் வண்ணம் இராமனைத் தருதி என்பால்’’ என்று ஒரு பக்கம் இராவணனுடைய உள்ளத்தில் சீதையைப் பற்றிய எண்ணத்தை வலுவாக உண்டாக்கி விட்டு மறுபக்கத்தில் இராமன் மீது தனக்குள்ள பெருங்காதலையும் மறைக்காமல் இராமனை எனக்குக் கொடுத்துவிடு என்றும் கூறுகிறாள். இருவரின் காமத்தீயும் பெரு நாசத்தை உண்டாக்குவதற்கான காரணமாக அமைவதைக் காண்கிறோம். இவ்வாறு இராவணனுடைய உள்ளத்தில் பெருங்காதல் என்னும் பெரிய அக்கினி பூதத்தைக் கிளப்பி விட்டு மேலும் கூறுகிறாள். அத்தகைய சீதையை உனக்காக எடுத்து வரவேண்டும்மென நான் முயற்சித்த போது அந்த இராமனுடைய தம்பி இலக்குவன் இடையில் புகுந்து என்னுடைய மூக்கையும் காதுகளையும், முலைக் காம்புகளையும் அறுத்து விட்டான். எனது வாழ்வு முடிந்தது. உன்னிடம் சொல்லி விட்டு உயிரை விடலாம் என்று இங்கு ஓடிவந்தேன் என்று ‘'நீ செய்த குற்றம் என்ன? உன் அங்கங்களை அவர்கள் அறுக்க வேண்டிய காரணம் என்ன” என்று இராவணன் கேட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசி முடித்தாள். 'அன்னவள் தன்னை நின்பால் உய்ப்பல் என்று அணுகல் உற்ற என்னை, அவ்விராமன் தம்பி இடைப் புகுந்து, இலங்குவாளான் முன்னை மூக்கரிந்து விட்டான்; முடிந்தது என் வாழ்வும் உன்னின் சொன்னபின் உயிரை நீப்பான் துணிந்த னென் என்னச் சொன்னாள்'