பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 62 تدخلإصلاح காதலும் பெருங்காதலும் சூர்ப்பனகை சீதையைப் பற்றிக் குறிப்பிட்ட நேரத்திலிருந்து இராவணன் எல்லாவற்றையும் மறந்தான். கரதுடனர்கள் போரில் கொல்லப்பட்டார்கள் என்னும் செய்தியை மறந்தான். மூக்கறுபட்டு நின்ற தங்கையின் முகத்தை மறந்தான், அதைச் செய்த செய்கையை மறந்தான். அதனால் எற்பட்ட அவமானத்தையும் மறந்தான். சிவபெருமான் கொடுத்த வரங்களையெல்லாம் மறந்தான். சீதையைப் பற்றி மட்டுமே சிந்தையில் கொண்டு நினைவில் நிறுத்தி நின்றான் என்று கம்பன் மிகவும் நுட்பமாகக் குறிப்பிடுகிறார். 'கரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான், உரனையும் மறந்தான் உற்ற பழியையும் மறந்தான், வெற்றி அரன் நையும் கொண்ட காமன் அம்பினான் முன்னைப் பெற்ற வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான்” என்றும், “சிற்றிடைச் சீதை என்னும் நாமமும் சிந்தை தானும் உற்றிரண்டு ஒன்றால், நின்றால் ஒன்றொழிந்து ஒன்றை உன்ன மற்றொரு மனமும் உண்டோ? மறக்கலாம் வழி மற்றுயாதோ? கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கலாமோ? என்றும் கம்பன் குறிப்பிடுகிறார். உயிரினங்களில் ஆண் பெண் பாலுணர்வு என்பது இயற்கை யானதாகும். ஆனால் அவ்வுணர்வு பொதுவாக இன விருத்திக்காகவும் பருவ நிலையை ஒட்டியுமே செயல்படுகின்றன. விலங்கினங்களிலும் பறவையினங்களிலும் கூட பெண் இனத்தின் விருப்பத்தின் படி தான் பாலியல் செயல்பாடுகள் நிகழ்கின்றன. நிறைவேறுகின்றன. இங்கு பெண் இனத்தின் இணக்கம் மீறப்படுவதில்லை. இருபாலரின் இணக்கத்தின் படியே கூடல் நிகழ்கின்றன. நிறைவேறுகின்றன. ஒரு தலைக் காமம் நிகழ்வதில்லை நிறைவேறுவதில்லை. ஆனால் மனித இனத்தில் அத்துமீறல்கள் நிகழ்கின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்கள் நடக்கின்றன. அவ்வாறு அத்துமீறல்கள் அதிகரிக்கும் போது அது பற்றி விளக்கமாக பல நெறிமுறைகளும் சாத்திரங்களும் உருவாயின. சாத்திரத்தில் வத்சாயனருடைய காமசூத்திரமும், திருக்குறளின் காமத்துப்பாலும் வேதங்கள் மற்றும் சங்க நூல் செய்திகளும் தலை சிறந்த ஒப்புயர்வற்ற இலக்கியங்களாகும். அந்த வரிசையில் இராமாயணம் திருமாலே மனித அவதாரம் எடுத்து ஒழுக்க நெறியைப் புகட்டும் ஒப்புயர்வற்ற