பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 63 மகாகாவியமாகும். கம்பன் தனது மகா காவியத்தில் மேலும் உயர்வான நிலையில் அந்நெறி முறைகளைப் பற்றி மிக அற்புதமாக, மிகவும் நுட்பமாக எடுத்துக் கூறுகிறார். மனிதன் தனது ஆறாவது அறிவின் மூலம் ஐந்து புலனறிவுகளையும் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தி முறைப்படுத்த வேண்டும் என்பது நமது நாட்டுக் கல்வியின் முதல் பாடமாகும். மனிதனுக்குக் காம உணர்வு மூலம் பெருங்காதல் ஏற்படும் போது அவன் நிலை தடுமாறுகிறான். அதைக் கட்டுப்படுத்தி நேர் நிலையில் செல்வதற்கான ஞானத்தை பொது அறிவும் கல்வி அறிவும் நிறைந்த ஞானத்தைப் பெற வேண்டும். அத்தகைய புலனடக்கத்திற்கு இராமன் இலக்குவன், பரதன், அனுமன், வீடணன் ஆகியோர் தலை சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். அவர்கள் நமக்குத் தலைசிறந்த வழிகாட்டிகளாவர். இக்கருத்தைக் கம்பன் மிக அற்புதமாக ஒரே வரியில் கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கலாமோ?” என்று குறிப்பிடுகிறார். இராவணன் வஞ்சனையாகச் சீதையைத் துக்கிச் சென்று இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைத்தான். அதற்கு முன்பே இலங்கை நாதன் சீதையைத் தனது இதயமாம் சிறையில் வைத்தான் என்று கம்பன் மிக நுட்பமாகக் குறிப்பிடுகிறார். காமத்தீயினால் இராவணனுடைய உள்ளம் வெயில் நாட்களில் வெண்ணெய் உருகுவதைப் போல உருகிக் கொண்டிருந்தது. “மயிலுடைச் சாயலாளை வஞ்சியா முன்னம், நீண்ட எயிலுடை இலங்கை நாதன் இதயமாம் சிறையில் வைத்தான்; அயில் உடை அரக்கன் உள்ளம் அவ்வழி மெல்லமெல்ல வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய் போல உருகிற்று அன்றே’’ இராவணனுக்கு ஏற்பட்ட காமநோய் வளர்ந்தது. வேகமாக வளர்ந்தது. கருநாகத்தின் கடும் விஷம் போல் ஏறியது. கல்வி அறிவு இல்லாத அறிவிலிகளை எப்படி தீமைகள் சுலபமாகப் பற்றிக் கொண்டு அவனுடைய அறிவை மழுங்கடிக்கிறதோ அதே போல அவனைக் காம நோய் பற்றிக் கொண்டு அந்நோய் அதிகரித்தது. 'விதியது வலியினாலும், மேலுள விளைவினாலும் பதிஉறு கேடுவந்து குறுகிய பயத்தினாலும், கதியுறு பொறியின் வெய்ய காமநோய் கல்வி நோக்கா மதியிலி மறையச் செய்த தீமைபோல் வளர்ந்ததுதன்றே’’ என்று கம்பர் கூறுகிறார்.