பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 69 என்று கம்பர் சிறந்த உவமையைக் காட்டி மாயமானின் செய்கையைப் பற்றிக் கூறுகிறார். பொன் மானைத் துரத்திக் கொண்டு இராமன் வெகு தொலைவு சென்று விட்டான். இனி அம்மானைத் துரத்திச் செல்வதில் பயனில்லை என்று கருதி அதன் மீதுத் தனது வில்லின் கணையை ஏவி விட்டான். அம்பு பட்ட மாயமான் வஞ்சனையாக சீதா, இலக்குவா என்று எட்டு திக்கினும் அப்புறமும் புக பெருங்குரல் எழுப்பிக் குன்றென வீழ்ந்தான்” பெண்மையால் உரை செயப்பெறுதி மாயமான் (மாரீசன்) குரலைக் கேட்டுச் சீதை வருந்தினாள், கலங்கினாள். இராமனுக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டதாகக் கருதினாள். இராமனைத் தேடும்படி இலக்குவனிடம் வற்புறுத்திக் கூறுகிறாள். 'குற்றம் விந்த குணத்தின் எம் கோமகன், மற்று அவ்வாள் அரக்கன் புரிமாயையால் இற்று வீழ்ந்தனன், என்னவும், என் அயல் நிற்றியோ இளையோர்! ஒரு நீ! என்றாள்' 'இராமன் வீழ்ந்த பின்னும் இன்னும் நீ இங்கேயே நின்று கொண்டிருக்கிறாயா என்று இலக்குவனிடம் கூறுகிறாள். இலக்குவனோ "இது மாயை, இராமனுக்கு ஒரு ஆபத்தும் ஏற்பட்டிருக்காது, இராமனுடைய பெருமையை நீங்கள் உங்கள் பெண்மை காரணமாக உணரவில்லை என்று கூறுகிறான். அதைக் கம்பன், 'எண்மையார் உலகினில் இராமற்கு ஏற்றம் ஓர் திண்மையார் உளர் எனச் செப்பற்பாலதோ! பெண்மையால் உரைசெயப் பெறுதிரால்”! என உண்ைைமயான் அனையவட்கு உணரக் கூறினான் எழுந்த குரல் இராமன் குரல் அல்ல, அது அரக்கனுடைய மாயக் குரல் என்று இலக்குவன் எடுத்துரைத்தான். அதைச் சீதை கேட்கவில்லை. நீ போகாவிட்டால் தீயில் விழுந்து மடிவேன் என்று கூறி அழுகிறாள். அவளுடைய வற்புறுத்தலைத் தாளாமல் இலக்குவன் இராமனைத் தேடிச் சென்று விட்டான்.