பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 72 ੋ=ਟੋ– காதலும் பெருங்காதலும் பெண் ஒருத்தியை அவள் தனியாக இருந்த போது பேதைவாழ் அரக்கன் கொண்டு சென்றான். உன்னைக் குற்றுயிராக்கி வீழ்த்தியுள்ளான். இதைப் பொறுத்துக் கொள்ளமாட்டேன். ஈரேழு பதினான்கு உலகங்களையும் அழித்து விடுகிறேன் பார் என்று கடுங் கோபத்துடன் இராமன் கூறுகிறான். 'பெண்தனி ஒருத்தி தன்னைப் பேதை வாழ் அரக்கன் பற்றிக் கொண்டனன் ஏக, நீ இக்கோள் உறக் குலுங்கல் செல்லா எண் திசை இறுதியான உலகங்கள் இவற்றை இன்னே கண்ட வானவர் களோடும் களையுமாறு இன்று காண்டி’ 'தாரகை உதிருமாறும்; தனிக்கதிர் பிதிரு மாறும், பேர் அகல வானம் எங்கும் பிறங்கு எரி பிறக்குமாறும் நீரொடு நிலனும், காலும், நின்றவும் திரிந்த யாவும், வேரொடும் பறியுமாறும், விண்ணவர் விளியு மாறும்' என்றும், இக்கணம் ஒன்றில், நின்ற ஏழினோடு ஏழு மேல் கீழ் மிக்கன போன்று தோன்றும் உலகங்கள் வீயுமாறும் திக்குடை அண்ட கோளப் புறத்தவும் தீந்து நீரின் மொக்குளின் உடையுமாறும் காண்” என முனியும் வேலை. என்றும் கடுமையான சொற்களில் இராமன் பேசுகிறான். இதைக் கேட்டு சூரியனும் மறைந்தான். திசையானைகள் நீங்கின. உலகமெல்லாம் துஞ்சின. மிக்கத் துணிவு கொண்ட இலக்குவன் கூட அஞ்சினான். அப்போது சடாயு பேசத் தொடங்கினான். சடாயு அனுபவ அறிவு மிக்க பேரறிஞன். மிக்க பலவான். இராவணனும் தனது தவம்மிக்க அரன்தந்த வாளால் அன்றி அவனை வென்றிருக்க முடியாது. அப்படியிருந்தும் இராவணனைக் கொத்திக் குதரி அவனுடைய வில்லையும் சூலத்தையும் ஒடித்து மற்றும் அரக்கனுடைய கவசத்தைக் கிழித்து தேரையும் தேர்ப்பாகனையும் குதிரைகளையும் வீழ்த்தி விட்டான். குற்றுயிராய்க் கிடந்த ஜடாயு, இராமனுக்கு ஆறுதல் கூறிப் பேசுகிறான். ஜடாயு தனது மரணத் தறுவாயில் அறிய பல கருத்துக்கள் நிறைந்த வார்த்தைகளில் பேசுகிறான். அவை பொருள் பொதிந்தவை