பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 75 தண் தமிழ் போன்ற இனிமையான மலைச்சாரலும் சந்திரனின் குளிர்ந்த நிலவும் இராமனுடைய காதலைத் தூண்டியது. இராமன் சீதையை நினைத்து வருந்தினான் என்பது கம்பர் வாக்கு. 'வண்டுளர் கோதைச் சீதை வாள்முகம் பொலியவானில் கண்டனென் என்ற வீரற்கு ஆங்கொரு காதல் காட்டத் தண் தமிழ்த் தென்றல் என்னும் கோள் அராத் தவழும் சாரல் விண்தலம் விளங்கும் செவ்வி வெண்மதி விரிந்தது அன்றே' என்று கூறும் படியாக நிலவொளி பரந்து விரிந்து பரவியது. போக்கரும் காதலும் சீதையின் பிரிவாற்றாமையால் இராமன் வருந்துகிறான். ஒரு பக்கம் மானம், மறுபக்கம் காதல். இவற்றுக்கிடையில் சிக்கி இராமன் தவிக்கிறான். இத்துன்பம் இராமனை வாட்டுகிறது. பூண்டமானமும் போக்கரும் காதலும்’ என்று கம்பர் குறிப்பிடுகிறார். இவ்வாறு அவமானத்திற்கும் தனது உள்ளத்திலிருந்து நீக்க முடியாத காதலுக்கும் இடையில் சிக்கி வருந்தி இராமன் தனக்கு ஒரு வில்லும் வேண்டுமோ என்று தனது வீரத்தையும் பழித்துக் கொள்கிறான். 邨 +-సి: மானமும், போக்கரும் காதலும் - தூண்டநின்றிடை தோம் உறும் ஆருயிர் ২ மீண்டும் மீண்டும் வெதுப்ப • تSلم 侈 வெதும்பினான்; வேண்டுமோ எனக்கு برای سر གཉྫ༣.eམཁར་ཕུe வில் என்பான்” என்பது கம்பரது அரிய பாடல். உலகெலாம் உள்ள பல்லுயிர் ~a , காப்பதற்கு நேர்ந்த \ யான் எனது துணைவியான ஒரு குல மங்கையைக் காப்பதற்கு முடியாமல் அவளுடைய துயரைத் தீர்ப்பதற்கு முடியாமல் அதற்கான திறன் இல்லாமல் இருக்கிறேன், எனது