பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் Ꮩ11l ஒரு தடவை மதுரையில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி இப்போது ஒய்வு பெற்றுள்ள எனது நண்பரிடம் இவ்வாறு கம்பனைப் பற்றிய ஒரு நூல் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினேன். அப்போது அவரும் பெரும் மகிழ்ச்சியடைந்து எழுதுங்கள், அண்மைக் காலங்களில் கம்பர் விழா சொற் பொழிவுகளை வைத்தும் சில தலைப்புகளில் கட்டுரைகளாகவும் தான் சிறு நூல்கள் வெளி வந்திருக்கின்றன. கம்பனைப் பற்றியும் கம்ப ராமாயணத்தைப் பற்றியும் தரமான பெரிய நூல்கள் ஆய்வு நூல்கள் வெளி வர வேண்டும். நீங்கள் முயற்சி செய்யுங்கள்’’ என்று கூறினார். அதன் பின்னர் சற்று விரிவாகவே எழுதலாம் என்று முயற்சித்தேன். அப்போது நூலும் நீண்டு விட்டது. மேலும் நீண்டு கொண்டே போயிற்று பெரிய நூலாக இருந்தால் அதை அச்சடிப்பதற்குச் செலவு அதிகமாகும். நூலின் விலையும் கூடும். விலை அதிகமாக இருந்தால் வாங்குபவர்கள் தயங்குவார்கள். விற்பனையாவதும் கஷ்டமாக இருக்கும் என்பதாக வெல்லாம் கருதி கம்பன் ஒரு சமுதாயப் பார்வை என்னும் தலைப்பிலான நூல் எழுதிய போது சில தலைப்பு அத்தியாயங்களைத் தனியாகப் பிரித்து அவைகளைத் தனி நூல்களாக எழுதி வெளியிடத் தீர்மானித்தேன். \ கம்பன் ஒரு சமுதாயப் பார்வை என்னும் நூலில் கம்பனுடைய கடவுட் கொள்கை, சகோதரத்வம், மானுடம் அரசியல், கம்பனும் தமிழும் என்னும் தலைப்புகளிலான அத்தியாயங்களுடனான நூல் அச்சுக்குப் போயிருக்கிறது. அந்நூல் விரைவில் வெளிவரும். அதைத் தொடர்ந்து 'கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்” என்னும் தலைப்பில் இந்த நூலை எழுதி முடித்துள் ளேன். கம்பனுடைய காவியத்தின் கவிதைகளின் ஆழத்தைக் காண்பது கடினம். கம்பனே கூட இராமாயண காவியத்தைப் பாடத் தொடங்கிய போது பாற்கடலைப் பூனை நக்கிக்குடிப்பதற்கு முயன்றதைப் போல நான் இராமன் கதையைப் பாடத் தொடங்கியுள்ளேன். என்று அவை யடக்கமாகக் கூறியுள்ளார். 'ஒசை பெற்று உயர்பாற்கடல் உற்று ஒரு பூசை முற்றவும் நக்கு புக்கு என ஆசைபற்றி அறையல் உற்றேன் மற்று அவ் ஏசில் கொற்றத்து இராமன் கதை; அரோ! என்று கம்பர் குறிப்பிடுகிறார்.