பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 85 குணத்தாலும் செய்கையாலும் நான்கு வர்ணத்தைப் படைத்தேன்’ என்றே கிருஷ்ண பரமாத்மா கீதையில் குறிப்பிடுகிறார். 'நாலுகுலங்கள் அமைத்தான் - அதை நாசமுறப் புரிந்தனர் மூடமனிதர் சிலம் அறிவு தர்மம் - இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்த வராம் மேலவர் கீழவர் என்றே - வெறும் வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம் போலிச் சுவடியை யெல்லாம் - இன்றே பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்’ என்று கண்ணன் கூறுவதைப் பாரதி தனது கண்ணன் பாட்டுகளில் கண்ணன் என் தந்தை என்னும் தலைப்பிலான பாடலில் குறிப்பிடுகிறார். இராமபிரானும் கண்ணபிரானும், இவ்வாறான அறிவு வழியின் மேன்மையைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளனர். இராமன் வாலி மீது அம்பெய்வதற்கு அவ்வாலி மனையின் மாட்சியை அழித்ததும் ஒரு காரணமாகிறது என்பதைக் கம்பன் மிக நுட்பமான பல கருத்துக்களில் எடுத்துக்காட்டுகிறார். மங்கையர் பொருட்டால் வாலி வானுலகு சென்று விட்டான் அவனுக்குரிய ஈமக்கடன் களெல்லாம் செய்து முடிக்கப்பட்டன. மறு நாள் இராமன் இலக்குவனை அழைத்து சுக்கிரீவனுக்கு முடி சூட்டிம்படி கூறினான். இலக்குவனும் சுக்கிரீவனுக்கு முறைப்படி முடி சூட்டி முடித்தான். கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சுக்கிரீவனுக்கு இராமன் சில நல்லுரைகளையும் நல்லாட்சி நெறிகளையும் பற்றி அறிவுரை கூறுகிறான். இந்த நல்லுரைகளில் சிறந்த பல அரசியல் கருத்துகளும் சமுதாயக் கருத்துக்களும் அமைந்துள்ளன. "ஈண்டு நின்று ஏகி, நீ, நின் இன் இயல் இருக்கை எய்தி வேண்டுவ மரபின் எண்ணி, விதி முறை இயற்றி, விர! பூண்ட பேர் அரசுக்கு ஏற்ற யாவையம் புரிந்து, போரில் மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி நல்திருவின் வைகி!' என்று வாழ்த்தி அனுப்பினான்.