பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 91 இங்கு இலக்குவன், இணையராம் என்னையின்ற இருவரும் என்றே நினைத்து நிற்கிறான் என்ற கம்பர் குறிப்பிடுகிறார். இங்கு தாயர் இருவர் என்பது கோசன்லயும் சுமித்திரையும் தான் இலக்குவனுடைய நினைவில் உள்ளனர். மேலும் தாரையின் விதவை நிலைக்கும் தாங்களும் ஒரு காரணமாகும் என்பதையும் நினைத்தும் இலக்குவன் கண்களில் நீர் பொங்கியது என்றும் கருதலாம். சினம் தணிந்துத் தாரையைக் கண்டு கண்ணிர் மல் கி "சேனையும் யானும் தேடித் தேவியைத் தருவன்’ என்று மாணவர்க்கு உறைத்த மாற்றம் மறந்தனன், அருக்கன் மைந்தன், எனவே அவனது நிலைமையை அறிந்து வரச் சொல்லி இராமன் என்னை அனுப்பினான்’ என்று இலக்குவன் கூறுகிறான். தாரை மிக நுட்பமாக அரசியல் அறிவு மிக்க சொற்களில். “சீறுவாய் அல்லை, ஐய! சிறியவர் தீமை செய்தால் ஆறுவாய்; நீ அலால்; மற்று ஆர் உளர்? அயர்ந்தான் அல்லன், வேறு வேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து அவ்வேலை ஊறுமா நோக்கித் தாழ்ந்தான், உதவி மாறுதவி உண்டோ?” என்று நயமாகக் கூறுகிறாள். ஆயிரம் கோடி அரிக்குலத்தினரை அழைத்து வர சுக்கிரீவன் ஆணைப்படித் தூதுவர் பல திசைகளிலும் போயுள்ளனர். விரைவில் எட்டுத் திக்குகளிலிருந்தும் அரிக்கூட்டம் திரளாக வந்து சேரும். உங்களிடம் புகல் அடைந்தவர்களுக்கு தாயினும் நல்ல நீங்கள் சினம் தணிந்து கருணை காட்டுங்கள் அதுவே தர்மமாகும். “செம்மை சேர் உள்ளத்தீர்கள், செய்த பேருதவி, தீரா வெம்மை சேர் பகையும் மாற்றி, அரசு விற்றிருக்க விட்டிர், உம்மையே யிகழ்வர் என்னின் எளிமையாய் ஒழிவது ஒன்றோ ! இம்மையே வறுமை எய்தி இருமையும் இழப்பர் அன்றே!' என்று தம் நிலையை எடுத்துக் காட்டினாள். மங்கையர் மேனி நோக்கான் இலக்குவன் முனிவு நீத்தனன். அப்போது மாருதி மெதுவாக இலக்குவன் முன்பு வந்து மிகவும் அடக்கமாக நின்று பலவும் கூறி இலக்குவனை மேலும் அமைதிப்படுத்தினான். அனுமன் கூறிய அறக்கருத்துக்கள் இங்கு நினைவு கூறத்தக்கது.