பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 94 تحجيصحح காதலும் பெருங்காதலும் சுக்கிரீவன் செய்த குற்றங்கள் தவறுகள் அவனைச் சிறுமைப்படுத்தி விடுகிறது. கள்ளினால் வரும் கேடுகள் இங்கு விரிவாக விளக்கப் படுகின்றன. கள்ளினால் ஏற்படும் தீமைகளில் ஒன்று மயக்கமும் வெறியும் அதனால் ஏற்படும் காம வெறியும் ஆகும், என்பது இங்கு வலுவாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. 'வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபில் கொட்பும், தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும் தாக்கும் கஞ்சமேல் அணங்கும் தீரும் கள்ளினால்; அருந்தினாரை நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காதன்றே?” என்று சுக்கிரீவன் தன்னை நொந்து கொள்கிறான். நறவாலும் அதாவது கள் முதலிய போதைப் பொருள்களாலும் காமத்தாலும் வரும் கேடுகள் பற்றி இப்பகுதியில் அழுத்தமாகக் கூறப்படுவதைக் ԵBITE IԱTEll TTԼՈ 13. சீதையைத் தேடி (6,\ இராமனுக்குச் சீதை மீதுள்ள ... .ெ மட்டிலாக் காதல் பற்றி அவனுடைய அல் NS வார்த்தைகளில் வெளிப் படுவதைப் - : zz - o * பல முறை காண்கிறோம். சீதையைப் f_. o ركд பற்றி எண்ணிக் ԵE 5)] ՃՄ) հՆ) ----- __ _ - ாண்டிருந்த இராமன் முன்பாக வானர சைன்யம் படை திரண்டு வந்து நின்றது. சேனையைக் காணும்படி சுக்கிரீவன் இராமனிடம் வேண்டிக் கொண்டான். வானரப் படை மேலும் மேலும் வந்து குவிந்து கொண்டிருந்தது. அதன் முடிவைக் காண முடியவில்லை. அதன் வலுவையும் பெருக்கத்தையும் கம்பன் மிக அற்புதமான உவமைகளுடன் மிகச் சிறப்பாக விவரித்துக் கூறுகிறார். 'ஒடிக்கு மேல், வட மேருவை வேரொடும் ஒடிக்கும், இடிக்கு மேல், நெடுவானக முகட்டையும் இடிக்கும், பிடிக்குமேல், பெரும்காற்றையும் கூற்றையும் பிடிக்கும் குடிக்கு மேல், கடல் ஏழையும் குடங்கையால் குடிக்கும்’ என்று மிக அழகாகக் குறிப்பிடுகிறார்.