பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 96 காதலும் பெருங்காதலும் கரந்தியின் அயலது, வான் தோய் குடுமிச் சுடர்த்தொகைய, தொழுதோர்க் கெல்லாம் வரன் அதிகம் தரும் தகைய, அருந்ததி ஆம் நெடுமலையை வணங்கி, அப்பால்” “வட சொற்கும், தென் சொற்கும் வரம்பாகி, நான் மறையும் மற்றை நூலும் இடை சொற்ற பொருட் கெல்லாம் எல்லையாய் நல்லறிவுக்கு ஈராய்வேறு புடை சுற்றும் துணையின்றிப் புகழ் பொதிந்த மெய்யே போல் பூத்து நின்ற உடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று ஊர்தின் மாதோ!' “கோடுறு மால்வரை அதனைக் குறுதிரேல் உம் கொடிய கொடுமை நீங்கி வீடுறுதிர்; ஆதலினால் விலங்குதிர்; அப் புறத்து நீர் மேவு தொண்டை நாடுறுதிர் உற்றதனை நாடுறுதிர், அதன் பின்னை நளி நீர்ப் பொன்னிச் சேடுறு தண்புனல் தெய்வத் திருநதியின் இரு கரையும் தெரிதிர் மாதோ' "துறக்கம் உற்றார் மனமென்னத்துறை கெழுநீர்ச் சோணாடு, கடந்தால், தொல்லை மறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வி னோடும் ஒதுங்கி, மணியார் ஓங்கல் பிறக்கம் உற்ற மலைநாடு நாடி, அதன் தமிழ் நாட்டில் பெயர்க மாதோ' அதன் பின்னர் "தென்தமிழ் நாட்டு அகன்பொதியில் திருமுனரிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்மீரேல், என்றும் அவண் உறைவிடமாம்; ஆதலினால் அம்மலையை இறைஞ்சி ஏகிப்