பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 98 வரை செய்தாள் வில்இறுத்தவன் அ, மா, முனியொடும் விரைசினான் அல்லனேல் விடுவில்யான் யான் உயிர்எனா கரைசெயா வேலையின் பெரிய காதலன் தெரிந்து உரைசெய்தாள், அஃதெலாம் உணர நீ உரை செய்வாய்” “முன்புநான், அறிகிலா, முளிநெடும் கானிலே என்பினே போதுவாய் நினைதியோ! ஏழை நீ! இன்பமாய் ஆருயிர்க்கு இனியை ஆயினை; இனித் துன்பமாய் முடிதியோ? என்றதும் சொல்லுவாய்” “ஆனபேர் அரசிழந்து அடவி சேர்வாய் உனக்கு யான் அலா தனவெலாம் இனியவோ இனி எனா மீனுலாம் நெடுமலர்க் கண்கள் நீர் விழ விழுந்து ஊர்நிலா உயிரின் வெந்து அயர்வதும் உரை செய்வார்” "மல்லன் மாநகர் துறந்து ஏகுநாள், மதி தொடும் கல்லின்மா மதின் மணிக் கடை கடைந்திடுதன் முன் எல்லை தீர்வு அரியவெம் கானம்யாதோ? எனாச் சொல்லினாள்; அஃதெலாம் உணர நீ சொல்லுவாய்” “இணையவாறு உரைசெயா, இனிதின் ஏழுதி எனா வனையு மாமணி நன் மோதிரம் அளித்து அறிஞ! நின் வினையெலாம் முடிக எணா விடை கொடுத்து உதவலும் புனையும் வார் கழலியான் அருளொடும் போயினான் என்றெல்லாம் சீதையின் வடிவழகையும் தோற்றத்தையும் நிறத்தையும் திங்கள் வாள் முகத்தையும் பற்றி இராமன் அனுமனிடம் சீதையின் தோற்றத்தைப் பற்றிய குறிப்புக் கூறுகிறான். அத்துடன், பழைய நிகழ்ச்சிகளை நினைவூட்டியும் கூறுகிறார். இந்த அழகிய உளம் நிறைந்த சொற்களில் சீதையின் மீது இராமனுக்குள்ள ஆழ்ந்த காதல் உணர்வைக் காண முடிகிறது. மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம் அனுமனும் அங்கதனும் அவர்கள் தலைமையிலான கூட்டமும் சீதையைத் தேடி சுக்கிரீவன் குறிப்பிட்ட வழியில் தமிழுடைத் தென் திசையில் சென்றனர். இங்கு கம்பர் தென் திசையை தமிழுடைத்