பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் இராம நாமத்தின் பெருமை. 'சடாயு, அரக்கனை எதிர்த்துப் போரிட்டு மடிந்தான்” என்னும் செய்தி அடங்கிய சொற்களை அனுமன் கூறிக் கொண்டிருந்ததைத் தொலைவிலிருந்து சடாயுவின் முன் பிறந்தோனாகிய சம்பாதி கேட்டு மெல்ல மெல்ல நடந்து அனுமனும் மற்றவர்களும் கூடியிருந்த இடத்திற் கருகில் வந்து சடாயு எப்படியிறந்தான் என விவரம் கேட்டான். அப்போது அவனை யார் என்று அனுமன் கேட்க, சம்பாதி தான் சடாயுவுக்கு முன் பிறந்தோன் என்பதைக் கூறித் தான் சூரியனை நோக்கிப் பறந்து செல்லும் போது தனது சிறகுகள் எறிந்த விவரத்தைக் கூறி இராம நாமத்தைக் கூறுங்கள், எனது சிறகுகள் முளைக்கும் என்று கேட்டுக் கொள்ள அனைவரும் இராமநாமத்தைப் பாட சம்பாதியின் சிறகுகள் முளைத்து அவன் கம்பீரமான தோற்றத்தைப் பெற்றான். 101 அந்த அதிசயத்தைக் கண்ட வானர வீரர்கள் மகிழ்ச்சியடைந்து இராம நாமத்தின் பெருமையை உணர்ந்து ஆவல் மிகுந்துச் சம்பாதியின் முழு வரலாற்றைக் கூறும் படிக் கேட்டனர். அப்போது சம்பாதி தானும் சடாயுவும் உடன் பிறந்தோர் என்பதையும் அவர்கள் இருவரும் சூரியனை நோக்கிச் சொல்லும் போது வெப்பம் தாங்கமுடியாமல் துயரம் அடைந்து சடாயுவைக் காக்கத் தனது சிறகுகளால் அணைத்ததையும் அவ்வாறு சடாயுவை அனைத்த போதுத் தனது சிறகுகள் எரிந்துத் தான் கீழே விழுந்ததையும் அப்போது ஆதவனை வேண்ட, "மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல், கண்ணிடை நோக்கி, உற்ற கருணையான், சனகன் காதல் பெண்ணிடையிட்டின் வந்த வானரர் இராமன் பேரை எண்ணிடை உற்ற காலத்து, இறகு பெற்று எழுதி!” என்றான் என்று சூரிய பகவான் கூறினார். அதன்படி சீதையைத் தேடி வந்த நீங்கள் இராம நாமத்தைப் பல முறை கூறிய போது எனது சிறகுகள் முளைத்தன, வென்று கூற அனைவரும் பெரு மகிழ்ச்சியடைந்தனர். அதன் பின்னர் வானரர்களும் தாங்கள் வந்த செய்தியையும் சீதையைத் தேடி அலைந்ததையும் அப்பிராட்டியைக் காணாமல் வருந்துவதையும் பற்றி அக்கழுகரசனிடம் கூறினார்கள். அப்போது சம்பாதி சீதையை இராவணன் பற்றிக் கொண்டு இலங்கை சென்ற போது நான் கண்டேன். அவளை இலங்கை வேந்தன் அங்கு தான் சிறை வைத்துள்ளான். நீங்கள் அங்கு சென்றுச்