பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 104 - காலத்தை வென்றவர், உலகத்தைப் படைத்த பிரமனே நீதான் என்று அனைவராலும் போற்றப்படுபவர், தேவைப்பட்டால் மிகுந்த அடக்கத்துடனும் ஒழுக்கத்துடனும் உள்ளவர். காலம் கருதி அவ்வாறு இருப்பவர். அமர் (போர்) வந்தால் சிங்கமெனசீறி மோதும் தன்மையுடையவர். அறிவால் ஆராய்ந்து ஒரு வேலையைத் (எண்ணித் துணிந்து கருமம்) தொடங்கி விட்டால் அதை முழுமையாகச் செய்து முடிக்கும் திறமை படைத்தவர். அது வல்லாமல் பெருமைக் குறைவான கொடிய இடையூறுகள் எத்தனை நேர்ந்தாலும் பின் வாங்காதவர், எனவே அனுமனே, மாருதியே, ஆஞ்சநேயா, வாயுபுத்திரா, எழுமின், புறப்படு, எம்முயிர் நல்கி இசை கொள்வாய், மகிழ்ச்சியான செய்திளைக் கொண்டு வந்து இராமனையும் மகிழச் செய்வாய். இவ்விராமனைக் கூடத் தனது துன்பக் கடலைத் தாவிடச் செய்யும் பேராற்றல் படைத்த அனுமனே! "இக்கடல் தாவும் வேகம் அமைந்தாய், புறப்படு’ என்று சாம்பவன் அனுமனைத் துாண்டினான். அவனுடைய பேராற்றலையும் வல்லமையையும் கிளப்பிவிட்டான். இது ஒரு அருமையான அற்புதமான காட்சியாகும். கம்பன் மிகவும் அழகாக கம்பீரமாக இங்கு அனுமனுடைய அதிசயமான குணச் சிறப்புகளை ஆற்றலை பேருருவப்படுத்தி எடுத்துக் காட்டுகிறார். அனுமன் பிரம்மாவுக்கு ஈடானவன். ஆயினும் அடக்கமானவன். அவனுடைய அரும் குணச் சிறப்புகளில் முக்கியமானது அவனுடைய புலனடக்கம். பெண்களைப் பற்றி பெண்களின்பத்தைப் பற்றி கனவிலும் நினைவிலும் கருதாதவன் என்பதைச் சாம்பவான் 'நினைவாலும் மாதர் நலம் பேணாது வளர்ந்தவன்' என்று கூறியதைக் கம்பன் இங்கு குறிப்பிடுகிறார். கம்பன் கூறும் முக்கியமான தத்துவங்களில் ஒன்று புலனடக்கம். புலனடக்கம் என்பது வெறும் தத்துவ விளக்கம் மட்டுமல்ல. கடுமையான முயற்சியும் செயல் திறனு மாகும். அறிவாற்றலும் செயல் திறனும் இணைந்ததாகும். இப்புலனடக்கக் கூறுகளில் முக்கியமான ஒன்று பெண்ணாட்டம் கொள்ளாமை என்பதை அனுமன் மூலமாகக் கம்பன் மிகவும் விவரித்துக் கூறுகிறார். அறிவாற்றலுக்கும் புலனடக்கத்திற்கும் சிறந்த உதாரணங்கள் நமது பண்டைய ரிஷிகள். நமது சாத்திரங்களில் நமது பண்டய காலத்து ரிஷிகளைப் பற்றிய பல உதாரணங்கள் உள்ளன.