பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ளிவாசன் 105 இராமாயணப் பெருங்கதையில் இராமன், பரதன், இலக்குவன், அறுமன் , வீடணன் ஆகியோர் சிறந்த அறிவாற்றலுக்கும் புலனடக்கத்திற்கும் அவை இணைந்த பெருமைக்கும் சிறந்த முன் - தாரணங்களாக இருக்கிறார்கள். இராமன் திருமணமானவன் ஆயினும் ஏகபத்தினி விரதன். வந்த சோதனை ஏற்பட்டாலும் மனதாலும் உணர்வாலும் சிந்தனையாலும் மற்றொரு மாதை நினைக்காதவன். பரதனும், இலக்குவனும், வீடணனும் திருமணமானவர்கள். பக்தியில் ஆழ்வார்களுக்கு ஒப்பானவர்கள். தன்னலமின்றி இராமனுக்காக சேவை செய்பவர்கள். புலனடக்கத்தில் இணையற்றவர்கள். அனுமன் திருமணம் இல்லாதவன். நித்தியப் பிரம்மச்சாரி, சிரஞ்சீவி சகாவரம் பெற்றவன். புலனடக்கத்திற்கு தலைசிறந்த முன்னதாரணமாகத் திகழ்பவர். அத்துடன் இங்கு அனுமனுடைய பிரம்மாண்ட மான உலகப் பெருவடிவம் (விஸ்வரூபம்) காட்டப்படுகிறது. அனுமன் பாரத அன்னை ான்றெடுத்த அரும் புதல்வர்களில் ஒருவன். அவ்வனுமன் ஈடு இணையில்லாத ஒரு மாவீரன். பேரறிஞன் சொல்லின் செல்வன். அவன் மகத்தான மகா அற்புதமான பல செயல்களைச் செய்யப் போகிறான். கடலைத் தாண்டப் போகிறான். இலங்கையின் கோட்டைக்குள் பலத்த பாதுகாப்புகளையும் கடந்து உள்ளே செல்ல விருக்கிறான். சீதையைக் காண விருக்கிறான். இராவணனை சந்தித்துப் பேச விருக்கிறான். அரக்கர்களுடன் போரிட விருக்கிறான். இலங்கையைத் தீக்கிறையாக்க விருக்கிறான். இராமாயண மகாகாவியத்தின் சுந்தர காண்டத்தில் அனுமனே கதாநாயகன். அவன் சுந்தரன், அழகன் என்று பெயர் பெறுகிறான். அவனுடைய பெருமைகளை அவனுடைய பெரும்பலத்தை அவன் அறியமாட்டான். அவைகளை மற்றவர்கள் எடுத்துக்கூற வேண்டும். அதற்கு ஒரு சாம்பவன் வேண்டும். பாரத புத்திரர் பலரும் இந்த இயல்பைப் பெற்றவர்கள். நாம் நமது பெருமையை நமது பெரும் பலத்தை நாம் அறியமாட்டோம். நாம் அதை உணரவில்லை. இமயத்தின் உயர்ச்சியையும், கங்கையின் புனிதத்தையும், கோதாவரியின் அகலத்தையும் அமைதியையும், வேங்கடத்தின் தனிச் சிறப்புகளையும், காவிரி யின் செழிப்பையும், வைகையின் பெருமை களையும், பொதிகையின் அறிவாற்றலையும், பாரதம் படைத்துள்ள நூறாயிரம் சாத்திரங்களின் அறிவுச் செல்வங்களின் பெருமைகளை