பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 106 2)=தி~ காதலும் பெருங்காதலும் நாம் அறியமாட்டோம். நமது மக்களுக்கு அவைகளை எடுத்துக்கூறக் கம்பனும் பாரதியும் வேண்டும். அவர்கள் நமது பெ ரு ைம க ைள யு ம் பலத்தையும் எடுத்துக் கூறி நாம் அதை உணர்ந்து விட்டால், எழுச்சி பெற்று விட்டால் நமக்கு ஈடு இணையே இல்லை. வையத் தலைமை நமக்கு ஏற்பட்டு ہ:ٹینیتلہصلى الله عليه وسلم விடுகிறது. છે. அனுமனும் பீமனும் வாயுபுத்திரர்கள். பாரத நாட்டின் மகா பலவான்கள் தர்மத்தின் பக்கம் நின்றவர்கள். அனுமனும் சஞ்சீவி மலையும் பாரத நாட்டின் பண்பாட்டுப் பெருமைகள். அனுமன் சிரஞ்சீவி, அந்தப் புகழ் நிறைந்த சிரஞ்சீவியும் சஞ்சீவி மலையும் பாரத நாட்டு மக்களுடைய உள்ளங்களில் நிரந்தரமாக நிலை பெற்றுள்ள பெருவடிவங்களாகும். சாம்பவன் கூறிய வார்த்தைகளில் உணர்வு பெற்ற அனுமன் வீர உரை கூறியதைக் கம்பன் மிக அற்புதமான, மிகவும் கம்பீரமான சொற்களில் எடுத்துக் கூறியுள்ளார். இலங்கையை வேரோடு அகழ்ந் தெடுத்து உங்களிடம் கொண்டு வரச் சொன்னாலும் என்னைத் தடுப்போரை யெல்லாம் எதிர்த்துத் தகர்த்தெறிந்து விட்டு பொலன் குழைமயிலைக் (அழகிய காதணிகளையுடைய சீதா பிராட்டியை) கொண்டு வரும்படி நீங்கள் கூறினாலும் அதைச் செய்து முடிப்பேன். அதில் மாற்றமில்லை. ஒருவன் தான் நினைத்த மாத்திரத்தில் ஏழு கடல்களையும் தாண்டிச் சென்று உலகனைத்தையும் வென்று சீதாபிராட்டியை மீட்பதற்குத் தகுதியுடையவன் என்று என்னை நீங்கள் ஏவினர்கள் என்றால் அதை விட நான் என் பிறவியில் பெற்றப் பேறு எதுவும் இல்லை. உலகம் அனைத்தையும் விழுங்குவதைப் போல முக்கடல்களும் பொங்கி எழுந்தாலும் அண்டமே உடைந்து பறந்து எதிர்வந்தாலும் உங்களுடைய அருளும் நமது அரசனுடைய ஏவலும் இருப்பதால் அடர்ந்த நீண்ட சிறகுகளைக் கொண்ட கருடன் பறப்பதைப் போல நானும் பறந்து சென்று காரியத்தை வெற்றியுடன் முடிப்பேன் என்று வீரம் கூறி எழுந்தான், என்று கம்பன் குறிப்பிடுகிறார்.