பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 109 இருந்தது. இத்தனை அழகான இலங்கை மாநகரை ஆளும் இராவணன் உலகம் முழுவதையும் அடக்கி ஆண்டு கொண்டிருக்கும் அந்த வணங்கா முடியான் இனி வாழ மாட்டான் என்றெல்லாம் சிந்தித்து அனுமன் வியப்படைந்தான். இலங்கை நகரின் சிறப்புகள் அரக்கர்களின் ஆனந்த வாழ்வு, அவர்களின் படைபலம் முதலியவற்றைறெல்லாம் கண்டு அனுமனே மிகவும் ஆச்சரியப்பட்டு இராவணனுடைய படைபலத்தை எவ்வாறு விவரித்து இராமபிரானிடம் கூறப்போகிறேன் என்று எண்ணினான் என்று கம்பர் குறிப்பிடுகிறார். “விற்படை பெரிதென்கேனோ? வேற்படை மிகும் என்கேனோ? மல்படை உடைத்து என்கேனோ? வாள்படை வலிது என்கேனோ? கற்பணம், தண்டு, பிண்டி, பாலம் என்று இனைய காந்தும், நற்படை பெரிது என்கேனோ? நாயகற்கு உரைக்கும் நாளில்” என்று அனுமன் சிந்தித்தான் - சூரியன் மறைந்தான். இருள் சூழ்ந்தது. அவ்விருளைப் பற்றி ஒருவன் மெய்யிலான் தீவினை போன்ற இருள் என்று கம்பர் குறிப்பிடுகிறார். அவ்விருள் வெண்மை நீங்கிய கருமை நிறைந்த புகழ் பழி பாவம் போல விரிந்து பரவியது. “வண்மை நீங்கா நெடு மரபின் வந்தவள், பெண்மை நீங்காத கற்புடைய பேதையைத் திண்மை நீங்காதவன் சிறைவைத் தான் எனும் வெண்மை நீங்கி புகழ் விரிந்தது என்னவே.” என்று இருள் பரவிற்று. அப்போது அங்கு மாருதி என்னும் பெயருடைய ஆண்தகை வந்துள்ளது, அறம் முளைத்ததுப் போல என்று சந்திரன் உதித்தான் என்பதைக் கம்பன் குறிப்பிடுகிறார். இனி அனுமன் இலங்கை நகருக்குள் புகுந்தது பற்றிக் கூறும் போது, “இகழ் வரும் பெருங்குணத்து இராமன் எய்தது ஒர் பகழியின், செலவென, அனுமன் பற்றினால் அகழ் புகுந்து, அரண் புகுந்து, இலங்கை அன்னவன் புகழ் புகுந்து உலாயது ஒர் பொலிவும் போன்றதே’’ என்று கம்பன் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.