பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 1 11 அனுமனுடைய அடியைத் தாங்க முடியாமல் கீழே விழுந்து எழுந்த அந்த இலங்கை மாதேவி என்பாள், அனுமனிடம் பணிந்து, அய்யா கேள், அயன் அருளால் இம் மூதூர் காத்து வந்தேன், எத்தனை காலம் காப்பன் யான் இந்த மூதூர்’ என்று அம்முத்தனை வினவிய போது, “முரண் வலிக்குரங்கு மிகுந்த வலிமையான ஒரு குரங்கு ஒன்று உன்னைக் கைத்தலம் அதனால் தீண்டின் உனது காவல் காலம் முடியும். அப்போது வந்து என்னைக் காண்பாய். அதன் பின்னர் இந்தச் சித்திர நகரம் சிதைவது திண்ணம்’ என்று கூறினான். அதற்குரிய காலம் வந்து விட்டது. அறம் வெல்லும், பாவம் தோற்கும் நீ நினைத்த தெல்லாம் நடக்கும். உன் முயற்சி வெற்றி பெறும். நீ இப்பொன்னகருக்குள் போகலாம்” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று போய்விட்டாள். அனுமனும் இராமனை உள்ளத்திலே எண்ணி வணங்கிக் கொண்டு மதிலைத் தாண்டி நகருக்குள்ளே சென்றான். அனுமன் ஐம்புலன்களை அடக்கியவன். அவைகளைக் கட்டுப் படுத்தியவன். அவைகளை வென்றவன். ஆறாம் அறிவில் மிக்கவன். அளவற்ற உடல் பலமும் பேராற்றலும் கொண்டவன். உள்ளத்தாலும் உணர்வாலும் பெண்ணாசை இல்லாதவன். பெண்ணாட்டம் இல்லாதவன். இராம சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன். அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன். தெய்விகப் பணியை மேற்கொண்டு இலங்கைக்கு வருகிறான். ஆகாய வழியில் கடலைத் தாண்டி வந்து கொண்டிருந்த போது பசிப் பிணிமிக்க பெண்பால் ஒருத்தியும் பெண் பால் எனக் கருதப்படும் அறத்தைக் கொன்ற மற்றொருத்தியும் வழி மறிக்க அவர்களின் அகண்ட வாய்க்குள் புகுந்து வெளியேறி இலங்கையின் உயர்ந்த கோட்டை மதில் அருகில் வந்த போது அவனைத் தடுத்த இலங்கை மாதேவி என்று பெயர் பெற்ற காவல் தெய்வமான அணங்கையும் கைத்தலம் தன்னால் தீண்டி அடிகொடுத்து அவளுடைய கதையையும் முடித்து இலங்கை மூதூருக்குள் சென்று விட்டான். இங்கு அனுமன் இலங்கைக்குச் செல்லும் தனது வழியில் மூன்று இலங்கையின் தனிச்சிறப்புகள் பற்றிக் கம்பநாடர் மிக அழகாக விவரிக்கிறார்.