பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.சி அ.சீனிவாசன் 113 (வடமுகாக் கினியும்) அறிவுக்குப் புனலும் இங்கு உவமை களாகக் கூறப்பட்டிருக்கின்றன. அடுத்து அனுமன் வீடணன் மாளிகையைக் கண்டான் ஒளித்து வாழ்கின் தர்மம் அன்னான் தனை உற்றான்' என்று கம்பன் குறிப்பிடுகிறார். அத்துடன் வீடணனைக் கண்ட அனுமன், 'உற்றுநின்று அவன் உணர்வைத் தன் உணர்வினால் உணர்ந்தான். குற்றம் இல்ல தோர் குணத்தினன் இவன்' ம? எனக் கொண்டான் என்று கம்பன் குறிப்பிடுகிறார். இன்னும், இந்திரசித்தன், அக்கன், அதிகாயன், மற்றும் இதர தம்பியர் 'இல்லங்களையும் வேறு Լ1 6ն) அரக்கர்களின் இல்லங்களையும் கண்டு விட்டு இராவணனுடைய பொன்மனை சேர்ந்தான். SSN-Q. T - " - = T == FF T~ இராவணனைப் பற்றி அவன் உறங்கி கொண்டிருந்த நிலையைப் பற்றிக் கூறும் போது அவனுடைய காம வெறியை வெளிப்படுத்திக் காட்டும் வகையில். “கள் அவிழ் மாலைத்தும்பி வண்டொடும் கரிந்து சாம்ப, ஒள்ளிய மாலை தீய உயிர்க் கின்ற உயிர்ப்பினானை' என்றும், பூவியல் அமளி மேலாப் பொய் உறக்கு உறங்குவானை’ என்றும், “காவி அம் கண்ணி தன்பால் கண்ணிய காதல் நீரின் ஆவியை, உயிர்ப்பு என்று ஒதும் அம்மியிட்டு அனாக்கின்றானை' என்றும் வாளாற்று கண்ணானை வஞ்சித்தான்’ என்றெல்லாம் கம்பன் விவரித்துக் கூறுகிறார். இராவணனைக் கண்டவுடன் அனுமன் கடுங்கோபம் கொள்கிறான். அவனுடைய ஆத்திரம் அதிகமாகிறது. அப்படியே அவ்வரக்கனை அடித்து நொறுக்கி, அவனுடைய மணி முடியை இடித்து, தலைகள் பத்தையும் தகர்த்து எனது ஆற்றலைக் காட்டுவேன் என்று நினைக்கிறான். வாளாற்று கண்ணாளை வஞ்சித்தான் மணிமுடி என் தாளாற்றலால் இடித்துத் தலை பத்தும் தகர்த்து இன்று என் ஆள் ஆற்றல் காட்டுவேன் என்று குமுறுகிறான்' என்று உறங்கிக் கொண்டிருந்த இராவணனைக் கண்ட அனுமனின் உள்ளக் குமுறல் குறித்துக் கம்பன் மிக அற்புதமாக விவரித்துக் கூறுகிறார்.