பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 116 >}=== காதலும் பெருங்காதலும் இவ்வாறு சிதை பழைய நிகழ்வுகளை நினைந்து நினைந்து நடப்பில் இருந்தத் தனது நிலையை எண்ணி எண்ணி மனம் நொந்து கொண்டிருந்தாள். ஒவ்வொன்றாகப் பழைய நிகழ்ச்சிகளும் அவைகளைக் கண்டும் சந்தித்தும் இராமன் இருந்த நிலைகளும் ஒவ்வொரு காட்சியாக அவளுடைய நினைவில் வருகின்றன. அவைகளை நினைந்து பெருமை கொண்டும் மனம் நொந்தும் உடல் உருகிக் கொண்டும் இருந்தாள். தன் கணவன் மீதான அன்பு, பாசம், காதல், அவனைப் பற்றிய பெருமை, அவனுடைய மாறாத மலர்ச்சி நிறைந்த முகம், அவனுடைய நட்பும் பண்பும் நிறைந்த செயல், அருமைத் தம்பி ப்ரதன் மீது அவன் காட்டிய அன்பு, ஏக்கம், மரியாதை, பரசுராமன் கொடுத்த வில்லைத் தழுவிய மேன்மை, பெருந்தன்மை, இந்திரன் காக்கை வடிவில் வந்து துன்புறுத்திய போது அக்காக்கையின் கண்ணவிக்க ஏவிய புல் கணையின் வெற்றி, விராடனுடைய சாபத்தை மாற்றிய இராமனுடைய ஆற்றல் முதலியவைகளை யெல்லாம் நினைந்து நினைந்து உடல் தேம்பினாள் என்பதைக் கம்பன் நமக்கு இராமனைப் பற்றிய காட்சிகளைக் காட்டுவது நமது நெஞ்சை உருக்கிவிடுகிறது. இங்கு இராமன் மீது சீதைக்குள்ள பேரன்பை பெரும் பாச உணர்வை வெளிப்படுத்தும் கம்பனுடைய கவிதைச் சொற்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது. அது மட்டுமல்ல, இங்கு கம்பனுடைய பாடல்களில் பொங்கி எழும் கம்பனுடைய இராம பக்தியையும் காண முடிகிறது. இங்கு கம்பர், கம்பநாடராக, கம்ப நாட்டாழ்வாராக தன்னுடைய அற்புதமான கவிதைகள் மூலம் காட்சி தருகிறார். உலகம் உள்ளளவும் கம்பனுடைய இராமகாதையும், இராம பக்தியும் நீடுழி வாழ்வதாக...! கண்டான் தேவியை ! சீதையைக் காவல் புரிந்த அரக்கியரைப் பற்றிக் குறிப்பிடும் போது 'எண்ணினுக்கு அளவு இடல் அரிய ஈட்டினர்; கண்ணினுக்கு அளவு இடல் அரிய காட்சியர் பெண் எனப் பெயர் கொடு திரியும் பெற்றியர் துண் எனத்துயில் உணர்ந்து எழுந்து சுற்றினார்' என்று கம்பர் குறிப்பிடுகிறார்.