பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 117 அனுமன் பிராட்டியைத் தன் கண்களால் கண்டுவிட்டான். அரக்கிகளுக் கிடையில் கண்ணிரும் கம்பலையுமாய் இருந்த தேவியை இவள் தான் ஜானகி என்பதை உணர்ந்து விட்டான். பெரு மகிழ்ச்சி கொண்டான். அறத்திற்கு அழிவில்லை என்று பெருமை கொண்டான். 'தேடினேன், கண்டனென் தேவியை” என்று மட்டற்ற ஆனந்தம் அடைந்தான் ஆடினான், பாடினான், அங்கும் இங்கும் பாய்ந்து ஓடினான், உலாவினான், உவகைத் தேன் உண்டான். 'விடினது அன்று அறன், யானும் வீகலேன்; தேடினென் கண்டனென் தேவியே! எனா ஆடினன், பாடினன், ஆண்டும் ஈண்டும் பாய்ந்து ஓடினன்; உலாவினன், உவகைத் தேன் உண்டான். 'மாசுண்டமணி அனாள், வயங்க வெங்கதிர்த் தேசுண்ட திங்களும் என்னத் தேய்ந்துளாள்; காசுண்ட கூந்தலாள் கற்பும் காதலும் ஏசுண்டது இல்லையால்; அறத்துக்கு ஈறு உண்டோ?” என்றும் “தருமமே காத்ததோ? சனகன் நல்வினைக் கருமமே காத்ததோ? கற்பின் காவலோ? அருமையே! அருமையே! யார் இது ஆற்றுவார்? ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கற் பாலதோ? என்றும் பெரு மகிழ்ச்சியடைந்து அனுமன் ஆனந்தக் கூத்தாடுகிறான். இங்கு சீதையின் கற்பின் பெருமையும் காதலின் சிறப்பும், சீதையைக் கண்ட அனுமனின் மட்டற்ற மகிழ்ச்சியும் எடுத்துக் காட்டப்படுகிறது. 17. சீதையின் சிறப்பு அனுமன் மறைந்திருந்து சீதையின் நிலையைப் பார்த்துக் கொண்டிருந்த போது, இராவணன் தன் பரிவாரங்களுடன் மிகவும் ஆடம்பரமாக அழகாக ஒப்பனை செய்து கொண்டு கம்பீரமாக சீதை இருக்கும் இடத்திற்கு வந்தான்.