பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 118 X-X=== காதலும் பெருங்காதலும் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த இடம் அசோக வனம். அவ்வனம் மிகவும் அழகானது. மரங்களும் செடிகளும், சோலைகளும், குயில்களும், மயில்களும் நிறைந்தது. அசோகவனம் இராவணனுக்கு உல்லாசவனம். சீதையை மயக்கும் நோக்குடன் அந்த ரம்மியமான சோலை வனத்தில் அவளை அங்குக் காவலில் வைத்திருந்தான். சீதைக்கு அரக்கியர் காவல் புரிந்து வந்தனர். அதே சமயத்தில் சீதையின் விருப்பம் எதுவானாலும் அவர்கள் நிறைவேற்றவும் தயாராக இருந்தனர். ஆயினும் சீதை தனது கணவனை நினைந்து கடுந்தவத்தில் இருந்தாள். இராவணனை நினைத்து கடுங் கோபத்துடன் இருந்தாள். இராவணன் சீதையின் முன்பாக மிகவும் சிறப்பான முறையில் காட்சி அளித்து அவளுடைய உள்ளத்தைக் கவரும் நோக்குடன், ஆடை அலங்காரங்களுடன் படை பட்டாளங்களுடன் கம்பீரமாக வந்து நின்று சீதையிடம் பேசுகிறான். கனிவாகப் பேசுகிறான். இராவணனுக்கு சீதை மீதுள்ள ஆசை மிகுதியால் தன்னை அழகும் அலங்காரமும் படுத்திக் கொண்டு வருவதைக் கம்பன் மிகவும் கவர்ச்சி கரமாக எடுத்துக் கூறுகிறார். 'மாலையும், சாந்தும், கலவையும், பூணும், வயங்கு நுண் துரசொடு, காசும், சோலையின் தொழுதிக் கற்பகத் தருவும், நிதிகளும் கொண்டு பின் தொடரப் பாலின் வெண் பரவைத் திரை கரும் கிரிமேல் பரந்து எனச்சாமரை பதைப்ப, வேலை நின்று உயரும் முயல் இல் வெண்மதியின் வெண் குடை மீதுற விளங்க” “கேடகத்தோடு மழு, எழு, சூலம் அங்குசம், கப்பணம் கிடுகோடு ஆடகச் சுடர்வாள், அயில் இலை, குலிசம், முதலிய ஆயுதம் அனைத்தும் தாடகைக்கு இரட்டி எறுழ் வலி தழைத்த தகைமையர், தடவரை பொறுக்கும் சூடகத்தடக்கைச் சுடுகினத்து அடுபோர் அரக்கியர் தலை தொறும் சுமப்ப,