பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கம்பநாடன் காவியத்தில் 122 >}=== காதலும் பெருங்காதலும் எங்கள் தவத்தைக் காப்பாய், உன்னால் அக்கூட்டம் குறையும் என்பதில் சந்தேகமில்லை” என்று இராமபிரானை வேண்டிக் கொண்டதை நானே பலமுறை கேட்டிருக்கிறேன். அதற்கிசைந்தவாறு நீ செய்த கொடுமைகளுக்கு நீயும் உனது அரக்கர் கூட்டமும் அழியப் போகிறது. உனது தங்கை மூக்கறுபட்டதையும் உனது தம்பிமார்களான கரதுடனர்கள் கொல்லப்பட்டதையும் நீ சிந்தித்துப்பார். 'கடும் விஷம் நிறைந்து கடிக்க வரும் கொடிய பாம்பும் கூட வேருக்கும் மந்திரத்திற்கும் கட்டுப்படும். உனக்கு நல்லது தீயது காட்டி இடித்து உரைப்பார்கள் யாரும் இல்லையா? உனது காலம் முடியப் போகிறது” என்று அரக்கனுக்கு அறிவுரை கூறினாள். 'சீதையின் இந்த சொற்களைக் கேட்ட இராவணனுக்குக் கடுங் கோபம் ஏற்படுகிறது. அவனுடைய காமத்தின் திறத்தையும் கடந்து நின்றது அவனுடைய சீற்றத்தின் தன்மை' என்று மிக அற்புதமாக இராவணனுடைய நிலையைப் பற்றிக் கம்பன் எடுத்துக் காட்டுகிறார். இராவணனுடைய கடும் சீற்றம் அவனுடைய காம வெறியையும் மிஞ்சியது. அவனுடைய உள்ளத்தில் எழுந்த சிற்றமும் காதலும் எதிர் எதிர் நின்றன. அவன் துடித்தான். முன்னும் பின்னும் குதித்தான். அவனுடைய கண்களில் தீப் பொறிகள் கிளம்பின. இவளைப் பிளந்து தின்பேன் என்று கத்தினான். இராவணனுடைய உள்ளத்தில் எழுந்த சீற்றமும் காதலும் எதிர் எதிர் நின்றதைப் பற்றி குறிப்பது என், காமத்தின் திறத்தையும் கடந்தது சீற்றத்தின் தகைமை” என்றும் கிளர்ந்த சீற்றமும் காதலும் எதிர் எதிர் கிடப்ப' என்றும் கம்பர் குறிப்பிடுகிறார். கரம் பிசைந்தான் இராவணனுடைய கடுமையான சொற்களை மறைந்திருந்த கேட்டுக் கொண்டிருந்த அனுமனுக்கு ஆத்திரம் பொங்கி எழுந்தது. கரம் பிசைந்தான். "அன்ன காலையில் அனுமனும் அருந்ததிக் கற்பின் என்னை ஆளுடை நாயகன், தேவியை என் முன் சொன்ன நீசன், கை தொடுவதன் முன் துகைத்து உழக்கிப் பின்னை நின்றது செய்குவேன்' என்பது பிடித்தான்”