பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கம்பநாடன் காவியத்தில் >== காகலம் பெங்ங்காகலம் 126 /_/一ろ காதலும மiபருங்காதலும அயோத்திக்குச் சென்று பரதன் முதலியோர்களையும் மற்றவர்களையும் மேலும் மிதிலை சென்று அங்குள்ளோரையும் வென்று வேர் அறுத்து உன் உயிரையும் கொள்வேன் என்று சீதையை அச்சுறுத்தி விட்டுச் சென்றான். இராவணன் சென்ற பின் சீதையைச் சுற்றிக் காவலில் இருந்த அரக்கியர் எங்கள் மன்னன் உன் மீது மெய்யன்பு வைத்துள்ளான் அவன் வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன், அய்யன், வேதம் ஆயிரம் வல்லோன், அறிவாளன், அவன் உன் மீது வைத்துள்ள உண்மையான அன்பு புன்மையான தல்ல. மென்மையானது, அவன் சொற்படிக் கேட்டு நீயும் உனது சுற்றமும் இனிது வாழலாம் என்றெல்லாம் கூறி சீதையை மிரட்டினர். இந்த வார்த்தைகளில் எல்லாம், இராவணனுடைய பெருங்காதல் வெளிப்படுவதைக் காண்கிறோம். ஜானகியின் சலிப்பு இராவணன் சென்று விட்டான். காவல் அரக்கியர் சீதையை மிரட்டினர். ஜானகி மனம் கலங்கினாள். 'கல்லாமதியே! கதிர்வாள் நிலவே! செல்லா இரவே சிறுகா இருளே ! எல்லாம் எனையே முனிவீர்! நினையா வில்லாளனையா யாதும் விளித்திலிரோ? “பேணும் உணர்வே ! உயிரே! பெருநாள் நாண் இன்று உழல்வீர், தனி நாயகனைக் காணும் துணையும் கழிவீர் அலிர்! நான் பூணும் பழியோடு பொருந்துவதோ?” “பொறையிலிருந்து ஆற்றி, என்உயிரும் போற்றினேன் அறையிரும் கழலவன் காணும் ஆசையால்; நிறையிரும் பல்பகல், நிருதர் நீள்நகர்ச் சிறை இருந்தேனை அப், புனிதன் தீண்டுமோ?” "பிறர்மனை எய்திய பெண்ணைப் பேணுதல் திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன்;