பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 128 அனுமன் தோன்றினான் சீதை சலிப்படைந்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றாள். அப்போது சீதையின் முன்பாக இராமன் பெயரைச் சொல்லி அனுமன் தோன்றினான். "அண்ட நாயகன் அருள் தூதன் யான் எனா தொண்டை வாய் மயிலினைத் தொழுது தோன்றினான்” என்று கம்பர் பெருமான் குறிப்பிடுகிறார். இங்கு அனுமன் சீதாபிராட்டி உரையாடல் ஒரு திவ்யமான காட்சியாகும். அனுமன் இராமபிரானைப் பற்றிய முழு விவரங்களை எடுத்துக் கூறிக் கணையாழியை அடையாளமாகக் கொடுத்தான். அக்கணையாழியைக் கண்டதும் சீதா தேவி பெரு மகிழ்ச்சியடைந்தாள். புத்துயிர் பெற்றாள். "இறந்தவர் பிறந்த பயன் எய்தினர் கொல் என்கோ? மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர் கொல் என்கோ? துறந்து உயிர் வந்து இடை தொடர்ந்தது கொல் என்கோ? திறம் தெரிவது என்னைகொல் இ நன்னுதலி செய்கை” “இழந்த மணிபுற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்; பழந்தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள் குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள் உழந்துவிழி பெற்றது ஓர் உயிர்ப் பொறையும் ஒத்தாள்" “வாங்கினள்; மார்பிடை வைத்தனள்; சிரத்தால் தாங்கினள், மலர்க்கண் மிசை ஒத்தினள், தடந்தோள் விங்கினள், மெலிந்தனள், குளிர்ந்தனள், வெதுப்போடு எங்கினள், உயிர்த்தனள், இது இன்னது எனல் ஆமோ?” “இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும் அருந்தும் அமுது ஆகியது, அரத்தவரை அண்மும் விருந்தும் எனல் ஆகியது; வியும் உயிர் மீளும் மருந்தும் எனல் ஆகியது; வாழி! மணி ஆழி!” என்று சீதை அனுமனைப் பெரிதும் பாராட்டினாள்.