பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 132 >>==== காதலும் பெருங்காதலும் இந்திர சித்தன் பெரும் படைகளுடன் வந்து அனுமனை பிரம்மாஸ்திரத்தால் கட்டினான். கட்டுண்ட அனுமனை அரக்கர்கள் இராவணனுடைய சபைக்கு இழுத்து சென்றனர். அதைக் கண்ட இலங்கை மக்கள் பலரும் பலவாறு பேசிக் கொண்டதைக் கம்பர் குறிப்பிடுகிறார். “கைலையின் ஒரு தனிக் கணிச்சி வானவன், மயில் இயல் சீதைதன் கற்பின் மாட்சியால், எயில் உடைத் திருநகர் சிதைப்ப, எய்தினன் அயில் எயிற்று ஒரு குரங்காய்; என்பார் பலர்' என்றும் “அரக்கரும், அரக்கியர் குழாமும், அல்லவர் கரக்கிலர் நெடுமழைக் கண்ணின் நீரது; விரைக்குழல் சீதை தன் மெலிவு நோக்கியோ? இரக்கமோ? அறத்தினது எண்மை எண்ணியோ?” என்று இலங்கை மக்களிடமும் இரக்கமும் இருந்ததைக் குறிப்பிட்டுக் கம்பன் கூறுகிறார். நான் முகன் படைக்குக் கட்டுண்ட அனுமன் சிந்தித்தான். தெய்வப் படைக்குப் பணிந்து நின்றான். இராவணன் சபைக்குச் சென்று அவனுக்கு நமது ஆற்றலை எடுத்துக் கூறி நீதியை எடுத்துரைத்து, அவனுடைய நெஞ்சில் தைக்கும்படி எடுத்துக் காட்டலாம் என்று கருதி அனுமனும் அமைதியாக அரக்கர்களின் அடிகளையும் வசைகளையும் தாங்கிக் கொண்டு சென்றான். அனுமன் கட்டுண்டதைக் கேள்விப்பட்டு சீதை துயரமுற்றாள். அனுமன் தனக்குக் கூறிய ஆறுதல் மொழிகளை நினைத்தும் மனம் உருகி 'ஏயப்பன்னினன் இன்னன; தன் உயிர் தேயக், கன்று பிடியுறத் தீங்கு உறும் தாயைப் போலத் தளர்ந்து மயங்கினாள்; தீயைச் சுட்டது ஒர் கற்பு எனும் தீயினாள்’’ தசமுகனை நேரில் கண்டான் தசமுகன் அரியாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்ததை அனுமன் நேருக்கு நேராகக் கண்டான். இராவணன் தனது ஆட்சி ஆசனத்தில் பேராண்மையுடன் வீற்றிருந்த போது அவனுடைய பத்து முகங்களும்