பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 138 பொருள் செருக்கும் காம வெறியும் அறியாமையால் ஏற்படுகின்றன. ஈதலும் காமவெறியினால் அழிந்துவிடுகின்றன. இவைகளை சிறந்தவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். விருப்பம் இல்லாதவளை மாற்றான் மனைவியை விரும்புவது நகைப் பிற்குரியதாகும். நாணமற்ற செயலாகும். அதனால் நல்ல உடம்புகளும் உபாதைப்பட்டு நசிந்துவிடும். அதனால் ஆண்மைக்கே இழிவான பழி ஏற்படும். இவையெல்லாம் நற்குணங்களோடு சேராது. ஒருவர் மீது வெறுப்பு உண்டான ஒருத்தியை அவர் விரும்பி வேண்டிய பின்னரும், அவள் மறுத்து விட்டால் அச் செயலில் தொடர்வது என்ன வாழ்க்கை? இதில் மூக்கறுபட்டு முகம் தனது அழகை இழக்கிறது. செழுமையான முகத்தில் கண், காது, மூக்கு, உதடுகள் முதலிய பல உறுப்புகள் உள்ளன. அதில் நன்கு வளர்ந்து முகத்தின் பொலிவைக் காட்டுவது நாசி. அம்மூக்கு அறுபட்டு விட்டால் அதை அழகு என்று கூறலாமா? என்ற சிறந்த உவமையுடன் பொருள் பொதிந்தச் சொற்களில் அனுமன் பொது நெறியை எடுத்துக் கூறுகிறான். எனவே, இந்த தீய செயலைக் கைவிட்டு உனது அறிய செல்வங்களையும் உறவினர்களையும் மனைவி மக்களையும், உனது உயிரையும் காப்பாற்றிக் கொள்ளச் சீதையை விட்டுவிடுமாறு எனது அரசன் சுக்கிரீவன் சொல்லி அனுப்பினான் என்று தூதுவனுக்குரிய முறையில் மிகவும் அடக்கமாகவும் பொறுமையாகவும் மிக நுட்பமாகவும் அனுமன் எடுத்துக் கூறினான். இவைகளைக் கேட்டவுடன் இராவணன் பெரும் சிரிப்பு சிரித்தான் இதை எனக்குச் சொல்வதற்கு ஒரு குன்றின் மேல் வாழும் குரங்கு தானா கிடைத்தது என்று மேலும் ஆணவத்துடன் சிரித்தான். அனுமன் கூறிய அறவுரைகள் நல்லுரைகள், வேண்டுகோள்கள் ஆகியவை இராவணனிடத்தில் அவனுடைய உள்ளத்தில் ஏறவில்லை. அவனுடைய காமவெறி சானகியை அடைவது எப்படி என்னும் ஏக்கம் ஒரு பக்கம் - க இருந்து ஆட்சி த்திக் கொண் க்கம் கம்பீப் ஆணவம், தன்னகங்காரம் ஆகியவை மறுபக்கம் இணைந்து நின்றான். 'குரங்கு வார்த்தையும் மானிடர் கொற்றமும் இருக்கட்டும்நீ ஏனடா இரும்புரத்தினுள் துது புகுந்த பின்னர் அரக்கரைக் கொன்றது’ என்று கோபத்துடன் கேட்டான். அனுமன் மிகவும் நுட்பமாகப் பதில் கூறினான். -