பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.சீனிவாசன் அ.சனவாசன 141 தீண்டிலன் என்னும் வாய்மை, திசைமுகன் செய்த முட்டை கீண்டிலது, அறந்தன் உச்சி கிழிந்திலது, எழுந்த வேலை மீண்டில; சுடர்கள் யாவும் விழிந்தில; வேதம் செய்கை மாண்டிலது; என்னும் தன்மை வாய்மையால் உணர்தி மன்னோ !” என்று அனுமன் பெருமகிழ்ச்சியுடன் பெருமைபடக் கூறினான். இங்கு அனுமன், சீதாபிராட்டியின், கற்பு, குலம் பெருமை, மாட்சி ஆகியன பற்றி விரிவுபடக் கூறுவதைக் காண்கிறோம். “கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்’’ என்றும் "என் பெரும் தெய்வம் என்று உயர் குடிப் பிறப்பில் தோன்றியவளாய், பொறுமைக்கு இலக்கணமாய், “கற்பெனும் பெயரது ஒன்றுகளி நடம் புரியக் கண்டேன் என்றும் தவம் செய்த தவமாய் தையல்' வான் உயர் கற்பினாள் என்றும் அனுமன் பெருமைபடக் குறிப்பிடுகிறான். கம்பன் காட்டும் இக்காட்சி ஒரு அற்புதமான காட்சியாகும். அனுமனுடைய பெருமுயற்சியால் அரும் செயலால் இராமபிரானுக்குப் புதிய நம்பிக்கையும் தெளிவும் கிடைக்கிறது. அனுமனுடைய இந்த அற்புதமான அரும் செயல் அனைவராலும் பாராட்டத்தக்கது, போற்றத்தக்கது. இராமாயணப் பெருங்காவியத்தில் கந்தர காண்டம் மிகவும் சிறப்பு மிக்கது. அதைப் பாராயணம் செய்தால், படித்தால், படிப்பதைக் கேட்டால் நமது துன்ப துயரங்கள் தீரும். நம்மிடத்தில் நமது விட்டில் நமது நாட்டில், நமது உள்ளத்தில், மகிழ்ச்சி நிலவும் நமது கஷ்டங்கள் தீரும். புதிய நம்பிக்கை பிறக்கும். கணையாழியும் சூடாமணியும் பரிமாரிக் கொண்டது புதிய நம்பிக்கையை மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. வனவாசக் கஷ்டங் களிலிருந்தும் பிரிவினைத் துன்பங்களிலிருந்தும், அசோகவனச் சிறைவாசத் துயரங்களிலிருந்தும் விடுதலை பெறுவதற்கான புதிய வாய்ப்புகள் கொண்ட நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அனுமன் ஒரு மகத்தான காரியத்தை சாதித்துள்ளான். அனுமன் கடலைத் தாண்டிச் சீதையைக் கண்டு வந்ததும், யுத்த காண்டத்தில் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்ததும் மகத்தான மறக்க முடியாத நிகழ்ச்சிகளாகும். இந்த மகத்தான செயல்களைச் செய்து முடித்த அனுமன் தெய்வநிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கிறான். நமது கோவில்களில் நிலை பெற்றிருக்கிறான். அனுமன் கர்மயோகிக்கு இலக்கணமானவன். அளவற்ற ஆற்றலுக்கு அடையாளமானவன்.