பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 142 X->=== காதலும் பெருங்காதலும் அனுமன் கடலைத் தாண்டிய காட்சி ஒரு அற்புதமான காட்சியாகும். அக்காட்சியைப் பற்றிக் கூறும் போது, விண்ணவர் ஏத்த, வேத முனிவர் வியந்து வாழ்த்த, கண்ணுதல் ஒழியச் செல்லும் கயிலை அம் கிரியை ஒத்தான், என்றும், கிழக்கு எழும் வழக்கு நீங்கி, வடக்கெழுந்து தென் இலங்கை செல்லும் பரிதிவானவனும் ஒத்தான், என்றும் ஆழ்சூழ் உலகம் எல்லாம் அருகனால் முருங்க உண்ணும் ஒழி நாள் வடபால் தோன்றும் உவா முழு மதியும் ஒத்தான் என்றும் கம்பன் மிகச் சிறப்பாகக் குறிப்பிட்டுக் கூறுகிறான். இன்னும் கம்பன் அனுமனைப் பற்றி நல்லறிவாளன்’ என்றும் நீதி நலத்தின் வினை ஒர்வான், என்றும், அயோத்தி வேந்தன் தன் புகழ் எனக் குவவுத் தோளான் எனவும், இராகவன் புகழ் எனும் நலத்தான் என்றும் இராகவன் சரம் எனப் புகழோன் என்றும் வினைப் ԼI ՃԱ) ԵE வென்றான் என்றும் காலம் பார்த்து இறைவேலை கடவாத கடல் ஒத்தான் என்றும் ஊழி தோறும் உயர்வுறும் கீர்த்தியான் என்றும் நீதியின் நினைந்தான் என்றும் வேத நன்னூல் Wஉ ய் த் து ள க ா ல .ெ ம ல் ல ள ம் புகழொடும் ஓங்கி நிற்பான் என்றெல்லாம் அனுமனைப் புகழ்ந்து குறிப்பிடுகிறார், உயர்திரு கம்பநாடர். ஆம், அனுமன் கம்பன் கூறியுள்ளது