பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 144 >)=> காதலும் பெருங்காதலும் இந்த மாமணியைக் கையில் வாங்கி அதைக் கண்டவுடன் இராமன் பெரு மகிழ்ச்சியடைந்தான். சீதை மீதிருந்த ஆசை இராமனை உருக்கி வேகவைத்துக் கொண்டிருந்த நிலைமாறி, அவனிடம் ஒரு புதிய தெம்பும் நம்பிக்கையும் ஏற்பட்டது. மெதுவாக உள்ளே எழுந்த காமம் (சீதை மீதான அன்பு உணர்வு) வளர்ந்து உயர்ந்து பொங்கி மெய்யுற வெதும்பி உள்ளம் மெலிவுறும் நிலையை விட்டான் அய்யன், அவன் கையில் சூளாமணிவந்து அதை அவன் பற்றிய போது சீதையைக் கையால் பற்றியது போல இருந்தது. 'பைப்பையப் பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி, மெய் உற வெதும்பி உள்ளம் மெலிவுறும் நிலையை விட்டான், அய்யனுக்கு அங்கி முன்னர் அங்கையால் பற்றும் நங்கை கை எனல் ஆயிற்று அன்றே கைபுக்க மணியின் காட்சி” என்று கம்பன் மிகவும் நுட்பமாக இராமனுடைய உணர்வு நிலையைக் குறித்துத் தனது கவிதையில் கூறுகிறார். அத்துடன் இராமனுடைய நிலையைப் பற்றி மேலும் கூறுகிறார். "பொடித்தன. உரோமம்; போந்து பொழிந்தன கண்ணிர் பொங்கித் துடித்தன மார்பும் தோளும்; தோன்றின வியர்வைத் துள்ளி: மடித்தது மணவாய், ஆவி வருவது போவது ஆகித் தடித்தது மேனி, என்னே! யார் உளர் தன்மை தேர்வார்' என்று கம்பர் மிக அற்புதமாகக் குறிப்பிடுகிறார். கணையாழியைக் கண்ட சீதைக்கு ஏற்பட்ட உணர்வு நிலையும் சூடா மணியைக் கண்ட போது இராம பிரானுக்கு ஏற்பட்ட உணர்வு நிலையும் அதைக் கம்பநாடர் எடுத்துக் கூறுவதும் இங்கு மீண்டும் நினைவு கூர்வோம். சீதா பிராட்டியும், இராமபிரானும் ஒருத்திக்கு ஒருவன் என்றும் ஒருவனுக்கு ஒருத்தி என்றும் ஒரு உயர்ந்த ஆண் பெண் உறவு நிலையை அன்பு காதல் நிறைந்த வாழ்க்கை நெறியாக ஒழுக்க நெறியாக சமுதாய அற நெறியாக மிக உயர்வான நிலைக்கு உயர்த்திக் காட்டிய தெய்வீகப் பாத்திரங்கள். எனவே தான் இராமனும் சீதையும் பாரத நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தெய்வங்களாக நின்று நிலை பெற்று வாழ்கிறர்கள். சீதையும் இராமனும் இல்லாத வீடில்லை. இமயம் முதல் குமரி வரையிலுமான பாரத நாடு முழுவதிலும் அதற்காப்பாலும் சீதையும் இராமனும் வாழ்கிறார்கள்.