பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 148 دجلإصلاح காதலும் பெருங்காதலும் நமது அழகிய நகரம் தீயால் சுடப்பட்டு எரிந்து போயிற்று என்றும் நமது அரசியல் அழிந்து போயிற்று என்றும் கூறுகிறாய். அதற்காகக் கவலை கொள்கிறாய். ஆனால் நீ வேறு ஒரு குலத்தோனுடைய தேவியை நயந்து சிறை வைத்த செயல் நல்லதல்ல. அதனால் உனக்குப் பழியே உண்டாகும். நமது நல்ல நகரம் அழிந்து விட்டது என்று வெட்கப்படுகிறாய். உன்னை விரும்பிப் போற்றும் தேவியர்கள் பலரும் (அழகிய பெண்கள் பலரும்) உன்னை உயிருக்கு உயிராய் பாராட்டி வருகிறார்கள். ஆயினும் உன்னை விரும்பாது மறுத்தும் பேகம் மாற்றான் ஒருவன் மனைவியின் பொன்னடி தொழ ஒடுகிறாய், என்று நீ வேறு ஒருவன் மனைவியை இரக்கம் இன்றி அறம் துறந்து, வன்முறையில் சிறை வைத்தாயோ அன்றே நமது அரக்கர் குலத்தின் புகழ் அழிந்து விட்டது. இழிவான செயல்கள் மூலம் நமது புகழைக் காப்பாற்றிவிட முடியாது. குற்றமற்ற மாற்றான் தாரம் ஒருத்தி. அவளை சிறையில் வைப்போம், அவள் மீது காம வெறி கொள்வோம், நாம் பேசுவது மானம் பேணுவது காமம். கூசுவது மானிடரை, நன்றாக இருக்கிறது நமது ஆட்சி என்று இடித்துக் காட்டுகிறான். 'ஆசில்பரதாரம் அவை அம் சிறை அடைப்போம் மாசில் புகழ் காதல் உறுவேம் வளமை கூறப் பேசுவது மானம் இடை பேணுவது காமம் கூசுவது மானுடரை, நன்று நம் கொற்றம்' என்று இடித்துக் கூறுகிறான். நீ, துரயவர்கள் செய்யும் செயல்களைச் செய்யவில்லை. குலச் சிறுமை செய்து விட்டாய். ஆயினும் இப்போது அந்தச் சீதையை விட்டுவிடுவதும் நமது பலவீனத்தைக் காட்டிவிடும். நமக்குப் பழி வந்து சேர்ந்து விட்ட போதிலும் இனி அந்த மானிடரை எதிர்த்துப் போரிட்டு வெல்வதே நலம். எனவே, 'உறுபடை ஊறுவதன் முன்னம் ஒரு நாளே ஏறுகடல் ஏறி நரர் வானரரை எல்லாம் வேறு பெயராத வகை வே ரொடும் அடங்க நூறுவதே கருமம் என்பது நுவன்றான்” இவ்வாறு கும்பகருணன் கூறிமுடித்தான்.