பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 150 >=}=ट्टे- காதலும் பெருங்காதலும் வீடணன் விளக்கவுரை வீடணன் மூவரில் இளையவன். அத்துடன் அவன் சில கசப்பான உண்மைகளையும் எடுத்துக் கூற வேண்டிய கட்டாயத்திலும் இருந்தான். எனவே மிக்க அடக்கத்துடன் இராவணனுடைய குணம் அறிந்து மிகவும் பெளவியத்துடன் தனது கருத்துக்களை எடுத்துக் கூறுகிறான். எந்தை நீ என்தாயும் நீ என்னுடைய முன்னவன் நீ, நான் வணங்கும் தெய்வம் நீ, மற்றும் முற்றும் நீ, இந்திரப் பெரும்பதம் இழக்கின்றாய் என்ற காரணத்தினால் நான் மிகவும் மனம் நொந்து இதைக் கூறுகிறேன். நான் சொல்ல வந்ததை முழுமையாகக் கேளுங்கள். இலங்கை நகரமும் உனது ஆட்சியும் பற்றி எரிந்தது, வானரம் சுட்டதனால் அல்ல, உலகின் தாயாகிய ஜானகி என்னும் பெயரினளுடைய கற்பின் நெருப்பினால் சுட்டதேயாகும். நன்கு ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் வானளாவிய உயர்வு என்றாலும் பாதாளமான வீழ்ச்சி என்றாலும் பெண் பொருட்டும் மண் பொருட்டும் ஏற்படுவதேயாகும். இந் நெடும் கடல் சூழ்ந்த இலங்கையின் வேந்தன் தன் நெடுந் தவத்தின் பலன்களையெல்லாம் ஒரு மானிட மடந்தை மீது கொண்ட ஆசையால் அழியப் போகின்றன என்பதை நினைத்துக் கவலை அடைகிறேன். தெய்வத் தன்மையுள்ள கற்புடையாவளாகிய \ வேதவதி என்பவள் நோய் உனக்குயான்” என்று சாபமிட்டாள். அந்த வேதவதியே இச்சீதை. தீயிடைக் குளித்த அத் தெய்வக் கற்பினாள், வாயிடை மொழிந்த சொல் மறுக்கவல்லமோ? நோய் உனக்கு யான், என நுவன்றுளாள், அவள் ஆயவள் சீதை, பண்டு அமு தில் தோன்றினாள் என்றெல்லாம் வீடணன் எடுத்துக் கூறினான். அடுத்து இராமனுடைய பெருமைகளையும், வலிமைகளையும் அவன் பெற்றுள்ள படைக்கலன்களின் சக்தியையும் பயிற்சிகளின் ஆற்றல் களையும் எடுத்துக் கூறி உணர்த்த