பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 151 கடைசியாக வீடணன் 'இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச வசையும் கீழ்மையும் மீக்கொளக் கிளையொடும் மடியாது, அசைவில் கற்பில் அவ்வணங்கை விட்டு அருளுதி! அதன்மேல் விஷயம்இல், எனச் சொல்லினள் அறிஞரின் மிக்கான்' என்று கூறி முடிக்கிறான். இராவணன் கடுங்கோபம் கொள்கிறான். வீடணன் எத்தனை சொல்லியும் அவன் கேட்கவில்லை. என் முன்நிற்காதே போ, என்று விரட்டி விட்டான். வீடணனும் தனது அமைச்சர்களுடன் இலங்கையை விட்டு வெளியேறி இராமனிடம் வந்து அடைக்கலம் அடைந்தான். இங்கு கும்பகருணனும் வீடணனும் இராவணனுடைய செயலைக் கண்டிப்பது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. கும்பகருணன் சாதாரண ஒழுக்க நெறி அரச நீதி, மனித இயல்பு ஆகிய நிலைகளி லிருந்து இத்தனை பெண்கள் இருக்கும் போது, விருப்பமில்லாத ஒரு மாற்றான் மனைவி மீது ஆசை கொண்டு அவளிடம் போய் ஏன் மண்டியிடுகிறாய் என்று கேட்கிறான். வீடணனோ இராமன் மீதும், சீதை மீதும் உள்ள பக்தி நிலையிலிருந்து அந்த தெய்வீக மடந்தை மீது நீ கொண்டுள்ள மோகத்தை விட்டுவிடு இல்லாவிட்டால் நீ அழிந்து போவாய் என்று கூறுகிறான். இந்த இரு அணுகும் முறைகளில் முடிவுகள் வேறு படுவதைக் காணமுடிகிறது. 4. H_4 *** *్మ* *్మ* 21. இராமனுடைய சிந்தனையும் துயரமும் இராமனும் இலக்குவனும் வானரத் தலைவர்களும் படைகளும் தென் திசைக் கடலைக் கண்டனர். இராமன் கடலைக் கண்டான் என்பதை “பொங்கிப் பரந்த பெரும் சேனை புறத்தும் அகத்தும் புடை சுற்றச் சங்கின் பொலிந்த தகையாளைப் பிரிந்த பின்பு, தமக்கு இனமாம் கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில் வுற்று இதழ் குவிக்கும்