பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 154 >>==== காதலும் பெருங்காதலும் கொண்டான். தன் மந்திரத்தால் அவர்களைத் தங்கள் நிஜ உருவில் கொண்டு வந்தான். அவர்களை இராமனிடம் கொண்டு வந்தனர். அவர்களும் இராமனிடம் உண்மையை உரைத்து அபயம் வேண்டினர். இராமனும் அவர்களிடம், 'எல்லையில் இலங்கைச் செல்வம், இளையவற்கு ஈந்த தன்மை சொல்லுதிர்; மகர வேலை கவிக் குலவீரர் தூர்த்துக் கல்லினில் கடந்தவாறும் கழறுதிர் காலம் தாழ்த்த வில்லினர் வந்தார் என்றும் விளம்புதிர் வினையம் மிக்கீர்!’ என்றும். “தாழ்விலாத்தவத்து ஒர் தையல் தனித்து ஒரு சிறையில் தங்கச் சூழ்விலா வஞ்சம் சூழ்ந்த தன்னைத்தன் சுற்றத்தோடும் வாழ்வெலாம் தம்பி கொள்ள, வயங்கு எரி நரகம் என்னும் மீள்வு இலாச் சிறையில் வைப்பேன் என்பதும் விளம்பு வீரால்' என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தான். இங்கு ஒரு சிறிய நுட்பமான போர்க்கால நிகழ்ச்சியாக ஒற்றர் நிகழ்ச்சி வருகிறது. வானரப்படை திரண்டு இலங்கை நகரை முற்றுகையிட்டிருக்கிறது. அப்படை பலத்தை அதன் பலவேறு விவரங்களை ரகசியங்களை அறிந்துவர இராவணன் தனது ஒற்றர்களை அனுப்பினான். அவர்களும் மாறு வேடத்தில் வானரர் வேடத்தில் படைக்குள் புகுந்தனர். வீடணன் அவர்களை அடையாளம் கண்டு அகப்பட்டுக் கொண்டனர். இராமன் அவர்களிடம் எச்சரிக்கையாகச் செய்திகளைச் சொல்லியனுப்புகிறான். வானரப்படைகள் கற்களைக் கொண்டு கடலைக் தூர்த்து பாலம் அமைத்து அவ்வழியாகக் கடலைக் கடந்து வந்து இலங்கையை முற்றுகையிட்டுள்ளனர். இளையவர் வீடணனுக்கு இலங்கை