பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ീങ്ങി 睡 o 6]]][TёҒ&TT 157 இராவணன் பிடிவாதமாகச் சீதையின் பொருட்டு நான் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அஞ்ச மாட்டேன் என்று வீரம் பேசினான். மாலியவான் அவ்வப்போது தலையிட்டுத் தனது கருத்துக்களைக் கூறிக் கொண்டு வந்தான். சீதையை விட்டு விடும்படி அறிவுரை சொல்லிக் கொண்டேயிருந்தான். இராவணன் கம்பீரமாகக் கோட்டைச் சுவர் மீதேறி நின்று இராமனையும் வானரப்படைகளையும் கண்டான். கோட்டை மீது நிற்பது யார் என்று இராமன் கேட்க வீடணன், 'நாறு தன் குலக்கிளையெல்லாம் நரகத்து நடுவான் சேறுசெய்தவன், உருப்பசி, திலோத்தமை முதலாக் கூறுமங்கயைர் குழாத்திடைக் கோபுரக் குன்றத்து ஏறி நின்றவன், புன் தொழில் இராவணன்' என்று குறிப்பிட்டான். இராவணன் திரும்பி வந்து ஒரு மணிமண்டபத்தில் அமர்ந்து கொண்டு என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்து கொண்டிருந்தான். அப்போது மாதுலத் தலைவன் மாலியவான் மீண்டும், "வேதனைக் காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது” என்றும் சீதையை விட்டு விடும்படி பின்னும் கூறினான். இங்கு ஒரு சிறு விவாதமும் நடைபெற்றது. அரக்கர் படையினர் எழு, மழு, தண்டு, வேல், வாள், இலை நெடும் சூலம், வில் முதலிய முழு முதல் படைகள் ஏந்தி போரில் முனைகின்றனர். இந்த வானரப் படையினர் ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் வெறுங்கையோடு வந்து என்ன செய்ய முடியும் என்று நிகும்பன் என்னும் சேனைத் தலைவன் கூறினான். அதற்கு பதிலளித்து மாலியவான், இந்த ஊரை எதிர்த்துப் பொடியாக்கிச் சென்ற அனுமனிடத்தில் சக்கரம் இருந்ததா? கையில் தனு இருந்ததா? வாளி இருந்ததா? இப்போது நேரில் வந்து இராவணனுடைய முகத்தில் அரைந்து அவனுடைய முடி மணிகளை எடுத்துச் சென்றச் சுக்கிரீவன் கையில் சூலமும் வேலும் வாளும் இருந்ததா? என்று கேட்டான். 'புக்கு எரி மடுத்து இவ்வூரைப் பொடி செய்து போயினாற்குச் சக்கரம் உண்டோ? கையில் தனு உண்டோ? வாளி உண்டோ? இக்கிரி பத்தின் மெளலி இனமணி அடங்கக் கொண்ட சுக்கிரிவற்கும் உண்டோ சூலமும் வேலும் வாளும்'