பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் XV 'வையம் மன் உயிராக, அம்மன் உயிர் உய்யத்தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு, ஐயம் இன்றி அறம் கடவாது; அருள் மெய்யின் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ?” என்றும், 'துரமகேது புவிக் கெனத் தோன்றிய வாம மேகலை மங்கையரால் வரும் காமம் இல்லை யெனில், கடும் கேடு எனும் நாமம் இல்லை; நரகமும் இல்லையே’ என்றும் பல முக்கிய எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய சிறந்த அரசியல் நெறிகளைக் கொண்ட சிறந்த அரசியல் கருத்துக்களை எடுத்துக் கூறுகிறார் கம்பர். மன்னன் உயிரெனவும் மக்கள் உடலெனவும் நிலவியிருந்த கருத்துகளை அடிப்படையில் மாற்றம் செய்து மக்கள் உயிரெனவும் மன்னன் உடலெனவும் அமையும் புதிய கருத்துக்கள் இங்கு கூறப் படுவதைக் காணலாம். ஏற்கனவே தசரத மன்னனுடைய ஆட்சியைப் பற்றிக் கூறும் போது, 'தாய்ஒக்கும் அன்பில்; தவம் ஒக்கும் நலம் பயப்பின், சேய்ஒக்கும் முன்னின்று ஒருசெல்கதி உய்க்கும் நீரால் நோய்ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி ஆயப்புகுங்கால் அறிவொக்கும் எவர்க்கும் அன்னான்' என்றும், 'வயிரவான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான் (தசரதன்) உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால் செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ் உயிர் எலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்’ என்று கம்பர் குறிப்பிடுகிறார். எனவே இங்கு கம்பநாடர், நாடும் மக்களும் உயிர் எனவும் நாட்டை ஆளும் மன்னன் உடல் எனவும் கொள்ளும் புது நெறியை எடுத்துக் கூறுவதைக் காண்கிறோம். அத்துடன் அரசுப் பொருப்பில் உள்ளவர்களுக்கு ஒழுக்கக்கேடுகளினால் ஏற்படும் கேடுகளையும் சுட்டிக் காட்டி எச்சரிக்கை செய்வதையும் காண்கிறோம்.