பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=- கம்பநாடன் காவியத்தில் 166 <-(=تہت وْ காதலும் பெருங்காதலும் இப்போது போர்க்களத்தில் தோல்வி கண்டு தனது ஆயுதங்கள் படைக்கலன்கள் அனைத்தையும் இழந்து நிராயுத பாணியாக நிற்கும் போது மீண்டும் இராவணனுக்குத் தனது தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இங்கு ஒரு வலுவான தர்ம நியாயம், அரசியல் நீதி, சமுதாய நீதி, ஒரு சாதாரண மனித நியாயம் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் அவன் ஒரு வல்லமை மிக்க வல்லரசனானாலும் அவன் செய்துள்ள தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு வாய்ப்புகள் அளிக்கப்படுவதும் எல்லா வாய்ப்புகளுக்குப் பின்னரும் திருத்திக் கொள்ளாவிட்டால் கடைசியாக வேறு வழியின்றிக் குற்றவாளியைத் தண்டிக்க வேண்டியதிருக்கிறது என்பதை இராமாயண மகா காவியத்தின் மூலம் அறிகிறோம். கம்பநாடர் இக்கருத்துக்களை மிக நயமாக மிக நுட்பமாகத் தனது மகா காவியத்தில் இலக்கிய நயத்துடன் தமிழ் நயத்துடன் எடுத்துக் காட்டுவதைக் காண்கிறோம். நீர் : *్మ* *్మ* *్మ* 25. நாசம் வந்து உற்ற போதும் நல்லதோர் பகையைப் பெற்றேன் இராவணன் போர்க் களத்தை விட்டு வெறுங்கையோடு இலங்கை திரும்பியதைக் கம்பன் தனது உலகப் புகழ் பெற்ற அற்புதமான தமிழ்க் கவிதைகளில் வடித்துக் கூறுகிறார். இப்பாடல்களைப் பாடாத கவிஞர்களில்லை. படிக்காத புலவர்களில்லை. விளக்கிக் கூறாத நூலாசிரியர்கள் இல்லை. வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும், நாரத முனிவற்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும், தாரணி மெளலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும், வீரமும் களத்தே போக்கி, வெறுங்கையோடு இலங்கை புக்கான்” என்று கம்பன் கூறுகிறார். இன்னும் 'மாதிரம் எவையும் நோக்கான்; வளநகர் நோக்கான், வந்த காதலர் தம்மை நோக்கான்; கடல் பெரு சேனை நோக்கான்; தாது அவிழ் கூந்தல் மாதர் தனித் தனி நோக்கத், தான் ஓர் பூதலம் என்னும் நங்கை தன்னையே நோக்கிப் புக்கான்’