பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் کی <<ك<< XVI கூனியைப் பற்றிக் குறிப்பிடும் போது துன்னரும் கொடுமனக் கூனி தோன்றினாள்' என்றும் ‘'தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினாள் ஊன்றிய வெகுளியாள், உளைக்கும் உள்ளத்தாள் கான்று எரி நயனத்தாள்; கதிக்கும் சொல்லினாள்; மூன்று உலகினுக்கும் ஒர் இடுக்கண் மூட்டுவாள்' என்றும், இன்னும் உள்ளமும் கோடிய கொடியாள்’ என்றும் குறிப்பிடுகிறார். * கைகேயியைப் பறறிக் குறிப்பிடும் போது தெய்வக் கற்பினள் என்று தொடங்கும் கம்பர் கடைசியில் 'தீயவை யாவையினும் சிறந்த தீயாள்' என்று கூறுகிறார். இராமனுக்கு நாடு இல்லை, காடு என்று கேள்விப்பட்டவுடன் இலக்குவன் சீறினான், வில்லை எடுத்தான், இராமன் அவனை அமைதிப் படுத்தினான். 'நதியின் பிழையன்று நறுபுனல் இன்மை, அற்றே பதியின் (தசரத மன்னனுடைய) பிழையன்று; பயந்து நமைப் புரந்தான் மதியின் (தாய் கைகேயியின்) பிழையன்று; மகன் (பரதன்) பிழையன்று; மைந்த விதியின் பிழை; நீ இதற்கு என்கொல் வெகுண்டது?’ என்றான் என்று இராமன் இலக்குவனை சாந்தப்படுத்தினான். ஆயினும் சினம் அடங்காத இலக்குவன் அதற்கு பதிலளித்து விதிக்கும் விதியாகும் என் வில் தொழில்’’ என்று பேசியதைக் கம்பன் குறிப்பிடுகிறார். பரதனுக்குத் தகவல் போய் அவன் அயோத்தி திரும்பிவந்தான். நடந்த செய்திகளை அறிந்தான். கடும் வேதனை அடைந்தான். தாயைக் கடிந்தான். தந்தையின் மரணம் கேட்டு துன்பப் பட்டான். இறந்த தந்தைக்கு ஈமக்கடன்கள் முடித்தான் இராமனை நாட்டிற்கு அழைத்து வரக்காட்டிற்கு புறப்பட்டுச் சென்றான். தொலைவில் வந்து கொண்டிருந்த பரதன் மீது சந்தேகப் பட்டு இலக்குவன் சீறினான். அப்போது பரதனுடைய சிறப்பை இராமன் எடுத்துக் கூறுகிறான். “சேண் உயர் தருமத்தின் தேவைச் செம்மையின் ஆணியை அன்னது நினைக்கல் ஆகுமோ?’ என்று இலக்குவனிடம் கூறி