பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 168 ملخصلإح காதலும் பெருங்காதலும் வேல் நகு நெடுங்கண், செவ்வாய், மெய் இயல் மிதிலை வந்த சானகி நகுவள் என்றே மானத்தால் சாம்புகின்றான்' என்று கவிச்சக்கரவத்தி கூறுகிறார். போர்க்களத்தில் அவமானகரமான தோல்வி ஏற்பட்ட பின்னரும் இராவணன் சீதையின் நினைவை விடவில்லை. அவன் போர்க் களத்திலிருந்து திரும்பி வந்து படுக்கையில் கிடந்த தன்மையைப் பார்த்து மாலியவான், “எப்போதும் வாடாத முகத்தைப் பெற்ற நீ இப்போது இவ்வளவு வாட்டத்தைக் கொண்டிருக்கிறாய். போரில் தோற்று விட்டாயா? மன வருத்தம் ஏன்? உன் தோள்களும் வாட்டம் கொண்டிருக்கின்றனவே, என்ன நடந்தது? என விவரம் அறிந்த மாலியவான் கேட்கிறான். இதுவரை இராம இலக்குவர்களை அற்ப மனிதர்கள் என்று இகழ்ந்து கொண்டிருந்த இராவணன் இப்போது இளையவன் இலக்குவன்) போர்த்திறனையும் பழுதில்லாத காகுத்தன் (இராமன்) பகழியின் (வில்லின்) சிறப்பு பற்றியும் புகழ்ந்து பேசுகிறான். “நாசம் வந்துற்ற போதும் நல்லதோர் பகையைப் பெற்றேன்' என்று கூறுகிறான். மாலியவான் மீண்டும், இராவணன் மீது அன்பும் அனுதாபமும் கொண்டு பேசுகிறான். 'வரக்கூடிய விளைவுகளைக் குறித்து நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் நீ கேட்கவில்லை. உள்ளத்தை வருத்து வதாயினும் உண்மை நிலைகளை உணர வேண்டும். கிளை தரு சுற்றம், வெற்றி, கேண்மை, கல்வி, செல்வம் அனைத்தும் கழிவது காண்பாய். இப்போதாவது அந்த சீதையின் நினைவை விட்டு விடு, என்று மிக்க விசனமும் கவலையும் கொண்டு எடுத்துக் கூறுகிறான். இடையில் ஆன்ற மாயைகள் பலவும் வல்ல மகோதரன் புகுந்து மாலியவான் கூறுவதை மறுத்தும் தடுத்தும், 'தேவியை விடுதியாயின் உன் புகழ் அழிந்து போகும். நீ கவலைப்படாதே உனது அருமைத் தம்பி கும்பகருணன் இருக்கிறான். அவன் உனக்கு வெற்றி தேடித் தருவான் என்று கூறி மீண்டும் தெம்பூட்டுகிறான். மகோதரன் பேச்சைக் கேட்ட இராவணன் மகிழ்சியடைந்தான். கும்பகருணனை எழுப்பிப் போரைத் தொடருவதற்கு ஏற்பாடு செய்து அதற்கான உத்தரவுகளை விடுத்தான்.